Hot Posts

6/recent/ticker-posts

இஸ்லாமியர்களின் கல்வி அன்றும்,இன்றும்..



அஸ்ஸலாமு அலைக்கும்.
இஸ்லாம் என்கிற மார்க்கம் ஆதி மனிதர் ஆதம் (அலை)தோன்றிய காலந்தொட்டே தொடர்ந்து வருகிறது.நபி ஆதம் (அலை)அவர்களைப் படைப்பதை மலக்குமார்கள் பலமாக எதிர்த்தாலும் கூட தன் எண்ணப்படி நபியையும்,அதற்க்கு பின் அவர்களின் சந்ததியையும் அல்லா படைத்தான்.அத்தோடு நில்லாமல் நபி ஆதம் (அலை)அவர்களுக்கு அல்லாஹ் உலகிலுள்ள அனைத்து பொருட்களின் பெயர்களையும் கற்பித்து கொடுத்தான்.
"கல்வி காணமல் போன ஒட்டகம் போன்றது".
அது எங்கிருப்பினும் அதைத் தேடி பெற்றுக்கொள்ளுங்கள் என்பது நாயகத்தின் அறிவுரை.
கல்வி என்பது நம் சமூகத்துக்கும் கொடுக்கப்பட்ட ஒன்றாகும்.
ஆனால் அது எங்குள்ளது என தேடும் மன நிலையில் கூட நாம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.நம் புனித வேதமான குர்ஆனில் அல்லாஹ் முதலாவதாக குறிப்பிட்ட வார்த்தை "இக்ர"என்பதே! அதன் அர்த்தம் "படியுங்கள்"என்பதாகும்.
மேலும் குர்ஆனில் கல்விப் பற்றி விழிப்புணர்வு பெரும் விதமாக அல்லாஹ் நிறைய இடங்களில் குறிப்பிடுகிறான்.
நபி(ஸல்)அவர்களுடன் "குத்தாபுல் வஹீ" என சொல்லப்படும் சில ஸஹாபிகள் எப்பொழுதும் இருப்பார்கள்.பெருமானாருக்கு எப்பொழுதெல்லாம் 
வஹீ வருகிறதோ அதை அவ்வப்போது தவறாமல் எழுதுவார்கள்.
காரணம் கல்வியின் மீதுள்ள தேட்டமே!
அதே போல் பெருமானாரின் ஹதீஸ்களை தொகுத்து தந்ததில் இமாம்களின் பங்கு மிக மகத்தானது.ஒரு ஹதீஸை சேகரிப்பதற்காக பல மைல்களை கடந்து தங்களது நூல்களில் பதிவு செய்துள்ளார்கள்.
இன்று நாம் பயன்படுத்தும் கணிதத்தில் பயன் படுத்தும் சூத்திரங்களை கூட அரேபியர்கள் தான் அறிமுகபடுத்தினார்கள்.எல்லா முன்னுதாரங்களையும்,வழி காட்டல்களையும் பெற்ற நம் சமூகம் கல்வியை எட்டா தூரத்திலேயே வைத்துள்ளது.
கல்வி நம் சமூகத்துக்கு தேவை என வாய்கிழிய பேசுகிறோமே தவிர ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவதில்லை
.கல்வியை தேடி அலைகின்ற சமூகமாக நாம் இருப்பதால் தான் நமக்குத் தேவையான அடிப்படை உரிமைகளை கூட பல போராட்டங்களால் குரல் கொடுத்து பெற ப்வேண்டிய சூழலிலேயே உள்ளோம்.
இந்தியாவில் ஜைன மதத்தினர் 94.1% பேர் கல்வி பெற்றவராக உள்ளனர்.ஆனால் நம் இஸ்லாமிய சமூகம் வெறும் 59.1% பேர் மட்டுமே கல்வி பெற்றுள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய அரசுத்துறை நிறுவனமான இரயில்வேயில் 1 லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
அவற்றில் இஸ்லாமியர் 14,000 பேர் மட்டுமே.!
குறிப்பாக அவர்களில் 98.7 % பேர் அற்ப சம்பளத்திற்கு அடிமட்ட வேளைகளில் உள்ளனர்.
பொதுவாக இந்திய அரசுத்துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு 31.3 % மட்டுமே.
17 கோடி மக்களை பெற்ற ஓர் சமூகம் எல்லா துறையிலும் மிக,மிக பின் தங்கிய நிலையிலேயே உள்ளது.
இவற்றிற்கு காரணம் கல்வியில் நம் முஸ்லிம் சமுதாயம் கொண்டுள்ள அலட்சியமே!!
அன்று முஸ்லிம்களின் கல்விக்கு அடிபணிந்தவர்கள்,இன்று முஸ்லிம்களை பின்னுக்கு தள்ளிவிட்டனர்.
இன்று நாம் எந்த அறிவியல் கண்டுபிடிப்பை எடுத்தாலும் அதை கண்டுபிடித்தவன் 90 % சதவீதத்துக்கு மேல் முஸ்லிம் அல்லாதவர்களே உள்ளனர்.ஆனால் இவற்றிற்கு முன்னோடிகள் முஸ்லிம்களே.!
இத்தகைய பலம் பெருமையை  மீட்க வேண்டுமானால் நாம் கல்வி கற்பதில்கவனம் செலுத்த வேண்டும்.இன்று பின்னுக்கு தள்ளப்பட்டுள்ள நாம் நம் முயற்சியை வலுவாக்கி அதன் மூலம் மீண்டெழுவோம்.
(இன்ஷா அல்லாஹ்)
ஏனெனில்,முயற்சி நம்முடைய வேலை,அதை முடித்து வைப்பது அல்லாஹ்வுடைய வேலை..
         ஆக்கம்,
 M .இத்ரீஸ் அஹ்மத்.