அண்ணா சாலையில் சிக்னல் இயங்காததால் வாகனஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அண்ணாசாலை-எல்டாம்ஸ் சாலை-தியாகராயர் சாலை சந்திப்பில் (தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில் சந்திப்பு) போக்குவரத்து சிக்னல் உள்ளது. இந்த சந்திப்பில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதை கண்காணிக்கவும் ஒரு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சந்திப்பில் தியாகராயர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலைக்கு இடது மற்றும் வலது பக்கமாக திரும்பி செல்வதற்காக ஒரு சிக்னல் இயக்கப்படுகிறது. இந்த சிக்னல் கடந்த 10 தினங்களுக்கு மேலாக செயல்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிக்னல் விழுந்து விட்டதா, இல்லையா என்று அறிய முடியாமல் தவித்துக் கொண்டே வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த சிக்னல்தான் இப்படி என்றால், தியாகராயர் சாலை-செவ்வாலியே சிவாஜி சாலை சந்திப்பில் உள்ள சிக்னல், ஆழ்வார்பேட்டை சந்திப்பில் உள்ள சிக்னல், லஸ் சந்திப்பில் உள்ள சிக்னல் ஆகியவற்றிலும் இது போன்ற குறைபாடுகள் உள்ளது என்று வாகன ஓட்டிகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
நன்றி;A.அஹமது அப்சல்.
Social Plugin