Hot Posts

6/recent/ticker-posts

கடல்வழி போக்குவரத்து 6 மாத கால படிப்பு : 10ம் வகுப்பு தகுதி பெற்றவர்களுக்கு..



 வேலைவாய்ப்புக்கு பஞ்சமில்லாத கடல்சார்ந்த தொழில்களில் கப்பல் போக்குவரத்து பிரதானமாக உள்ளது. இத்துறையில் பட்டப்படிப்பு, முதுநிலை, இன்ஜினியரிங், டிப்ளமோ தொடர்பான படிப்புகளை பல்வேறு பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் வழங்கி வருகின்றன. மத்திய கப்பல் துறையின் கீழ் செயல்படும் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆணையத்தின் இன்லேண்ட் நேவிகேஷன் இன்ஸ்டிடியூட்டில் கடல்வழி போக்குவரத்து தொடர்பான 6 மாத குறுகிய கால படிப்பு வழங்கப்படுகிறது. Rating Induction Course for Inland Vessels   என்ற இப்படிப்பை மேற்கொள்ள 10ம் வகுப்பு கல்வித்தகுதி போதுமானது.   16.2.2012 தேதிப்படி பதினேழரை முதல் 25 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கல்விக்கட்டணமாக ரூ.13 ஆயிரம் செலுத்த வேண்டும். தகுதித் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அடுத்த மாதம் 22ம் தேதி முக்கிய நகரங்களில் இத்தேர்வு நடைபெறும்.

படிப்புக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் கல்லூரி வளாகத்தில்   தங்கி 6 மாத கால படிப்பு மற்றும் பயிற் சியை பெற வேண்டும். தங்குமிடம், உணவு கட்டணம் தனியாக செலுத்த வேண்டும். www.niniedu.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் 10ம் வகுப்பு தேர்ச்சி சான்று, மதிப்பெண் பட்டியல், 2 புகைப்படம், சுய முகவரியிட்ட விண்ணப்ப உறை ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை The Principal, National Inland Navigation Institute, Galghat, Patna800 007 என்ற முகவரிக்கு வரும் ஜன.3ம் தேதிக்குள் அனுப்ப   வேண்டும். இதர விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.