Hot Posts

6/recent/ticker-posts

மண்ணடி வழியாக மெட்ரோ ரயில் அமைக்க தடை கேட்டு வழக்கு : தலைமை செயலருக்கு நோட்டீஸ்..



  ஜார்ஜ் டவுன் கட்டிட உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் மாணிக்கம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில் கூறியிருப்பதாவது: சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையம் வரை 23 கிலோ மீட்டர் நீளத்துக்கு பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது கட்டமாக சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 22 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதை அமைக்கப்படுகிறது. வண்ணாரப்பேட்டை, மண்ணடி வழியாக அமைக்கப்படும் ரயில் பாதையினால் இந்தப் பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 100 அடிக்கு கீழே அமைக்க வேண்டிய பாதையை 33 அடி ஆழத்திலே செய்வதால் கட்டிடங்களின் அடித்தளம், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இதனால் மண்ணடி வழியாக செல்லும் முதல்கட்ட பணிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் விசாரித்து, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர், தலைமை செயலர் மற்றும் மத்திய நகர வளர்ச்சி துறை இரண்டு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.