கொல்கத்தாவில் உள்ள மருத்துவக்கல்லூரி ஒன்றில் குழந்தைக்கு பொருத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் மாஸ்க்கை, குடிபோதையிலிருந்த மருத்துவமனை ஊழியர் மாற்றியதால் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
மாநில அரசின் கீழ் இயங்கும் கொல்கத்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு மாதக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் குழந்தைகள் வார்டை சுத்தப்படுத்த மருத்துவமனை துப்புரவு ஊழியர் வந்தார். அவர் குழந்தையின் முகத்தில் பொருத்தப்பட்டிருந்த மாஸ்க்கை எடுத்துவிட்டபடி, உறவினரிடம் அதிக ஆக்சிஜன் குழந்தைக்கு நல்லதல்ல எனவும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து அக்குழந்தை ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பணியில் இருந்த அந்த மருத்துவமனை துப்புரவு ஊழியர் குடிபோதையில் இருந்ததாக குழந்தையின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போது, புகாரை ஏற்க மறுத்ததாக தெரிகிறது. பின்பு, இந்த சம்பவம் தொடர்பான புகாரை பெற்றுக் கொண்ட மருத்துவமனை நிர்வாகம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
Social Plugin