Hot Posts

6/recent/ticker-posts

நடுக்கடலில் நின்ற சரக்கு கப்பலை சென்னை மெரீனா கடற்கரைக்கு இழுத்து வந்தது புயல்!!


சென்னை மெரீனாவில் தரை தட்டி நிற்கிறது கப்பல். 

தானே புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே அறிந்து சென்னை துறைமுகத்திற்கு வந்திருந்த 20 சரக்கு கப்பல்களை அதிகாரிகள் நேற்று நடுக்கடலுக்கு திருப்பி அனுப்பினர்.
 
இதன்படி சரக்கு ஏற்றி வந்த கப்பல்களும், சரக்குகளை இறங்கி நின்ற கப்பல்களும் நடுக்கடலில் நங்கூரம் இறங்கி நிறுத்தப்பட்டு இருந்தது.  
 
இன்று காலை புயல் காற்று பலமாக வீசியதால் நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சரக்கு கப்பல் அலையில் மிதந்து கரைக்கு இழுத்து வரப்பட்டது. மெரீனா கடலில் நேப்பியர் பாலம் அருகே உள்ள மதகு பகுதியில் அந்த கப்பல் தரை தட்டி நிற்கிறது.
 
எம்.ஜி.ஆர். சமாதி, அண்ணா சமாதிக்கு வந்த பொதுமக்கள் கப்பல் தரை தட்டி நிற்பதை கூட்டம் கூட்டமாக நின்று பார்த்து செல்கின்றனர். காற்று அதிகம் வீசுவதால் கப்பலை கடலுக்குள் இழுக்க முடியவில்லை. இதனால் அங்கேயே கப்பல் நிற்கிறது. கடல் சீற்றம் தணிந்த பிறகே கப்பலை மீட்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.