பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒன்டே கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்த தொடருக்கு இரு நாட்டு அரசுகளும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதற்கிடையே போட்டி தொடர்பாக பாகிஸ்தான் வாரிய சேர்மன் சஹா அஸ்ரப் பிசிசிஐ நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த முடிவு செய்தார். இம்மாத இறுதியில் அவர் மும்பை வர திட்டமிட்டார். ஆனால் அவரது பயணத்திற்கு பாகிஸ்தான் அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை.
இதற்கிடையே சர்வதேச போட்டிகள் அதிகளவில் உள்ளதால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. மார்ச் மாதத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அதைத்தொடர்ந்து ஐபிஎல் போட்டி தொடங்கிவிடும். இதனால் பாகிஸ்தான் அணி திட்டமிட்டபடி இந்தியா வருமா? என்பது சந்தேகத்திற்குரியது.அப்படியே இந்த சுற்றுப்பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டாலும் 3 ஒருநாள் போட்டி, ஒரு 20-20 மட்டும் நடத்தப்படும் என தெரிகிறது.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்று தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
Social Plugin