இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது. இதனையடுத்து 2வது டெஸ்ட் போட்டி நாளை இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு தொடங்குகிறது. சிட்னி மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக களத்தில் புற்கள் தெரிவதால் பந்து அதிவேகமாகவும், பவுன்சராகும் வகையிலும் இருக்கும் என கணித்துள்ளனர்.
இந்திய பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வகையில் இந்த ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதற்கிடையே முதல் டெஸ்டில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவும் அதே 11 வீரர்களுடன்தான் விளையாடும் என தெரிகிறது. இருப்பினும் கடைசி 2 நாள் பந்து சுழலும் என எதிர்பார்க்கப்படுவதால் ஓஜாவை கூடுதலாக சேர்க்கலாமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அதேபோல் விராட் கோக்லிக்கு பதிலாக ரோகித் சர்மாவை களமிறக்கலாமா என்ற ஆலோசனையும் நடக்கிறது. தேர்வுக்குழு உறுப்பினர்கள் மொகிந்தர் அமர்நாத், கிர்வானி ஆகியோர் இந்திய அணிக்கு சில டிப்ஸ்களை வழங்கினர்.
சிட்னி மைதானம் டெண்டுல்கருக்கு மிகவும் ராசியானது. அங்கு 4 டெஸ்ட்களில் விளையாடி 148 (நாட்அவுட்), 45, 4, 241 (நாட்அவுட்), 60 (நாட்அவுட்), 154 (நாட்அவுட்), 12 என்ற வகையில் ரன் குவித்துள்ளார். லட்சுமணும் சிட்னியில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். அவர் 7, 167, 178, 109, 20 என்ற வகையில் ரன் குவித்துள்ளார். எனவே சிட்னியில் இந்தியா சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு புதுவருடத்தின் தொடக்கத்திலேயே நீண்ட காலமாக ஏமாற்றம் அளிக்கும் 100வது சதத்திற்கும் சச்சின் முடிவுகட்டுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Social Plugin