சென்னை சென்ட்ரல் இருந்து கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புறநகர் ரயில் ஒன்று நேற்றிரவு புறப்பட்டது. இரவு 10.15 மணி அளவில் சென்ட¢ரலில் உள்ள பிளாட்பார்ம் எண். 13யை நோக்கி வந்து கொண்டு இருந்தது. நடை மேடை அருகே வரும் போது, திடீரென ஒரு பெட்டியின் சக்கரம் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, இதையடுத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் 13வது நடைமேடைக்கு வரவேண்டிய புறநகர் ரயில்கள் 10 மற்றும் 11வது நடைமேடைக்கு தற்காலிகமாக மாற்றிவிடப்பட்டது.
Social Plugin