டிஎன்பிஎஸ்சி சார்பாக மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், ஆர்.காந்தி, வில்சன், ஜி.சங்கரன் ஆகியோர் ஆஜராகி, ‘‘டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர்கள். இவர்களை ஊழல் வழக்கு விசாரணைக்கு உள்படுத்த மாநில அரசுக்கு அதிகாரமில்லை. இது தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்’’ என்றனர். தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, ‘‘இந்த விவகாரத்தில் அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. விசாரணையை நீண்ட நாள் தள்ளிவைக்கக்கூடாது’’ என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் இங்கு வழக்கை 3 வாரத்துக்கு ஒத்திவைக்கிறோம் என்றனர்.
Social Plugin