Hot Posts

6/recent/ticker-posts

அரசு பொதுத்தேர்வுகளில் தஞ்சை மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்..


  
அரசு பொதுத் தேர்வுகளில் தஞ்சை மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி சதவிகித்தை உயர்த்த வேண்டுமென தலைமையாசிரியர்களுக்கு கலெக்டர் பாஸ்கரன் அறிவுறுத்தினார்.
  
தஞ்சை கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12ம்வகுப்பு அரையாண்டு தேர்ச்சி சதவிகிதத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். 

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசியதாவது:
 
கல்வித்துறையில் அரசு அதிக செலவு செய்வது நாளைய சமுதாயம் சிறப்பாக உயர உருவாக்கும் முதலீடு. மாணவர் நலத்திட்டங்களான சத்துணவு, இலவச சைக்கிள், சீருடை, பாடநூல், மடிக்கணினி போன்ற நலத்திட்டங்களை மாநில அரசு உருவாக்கி அதன் மூலம் அனைத்து தரப்பு மாணவ, மாணவிகளும் தடங்கலின்றி கல்வி கற்க உதவுகிறது.  10, 11 மற்றும் 12ம¢ வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தலைமையாசிரியர்கள் மாணவ, மாணவிகள் அனைவரையும் அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சிபெறச்செய்து தஞ்சை மாவட்டத்தின் தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்த வேண்டும். மேலும், அடிப்படை ஆங்கிலமொழி பேச்சுத்திறன், பொதுஅறிவு போன்றவைகளில் மாணவர்களை மிளிரச்செய்ய பயற்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கையோடு நல்ல முடிவெடுக்கும் திறனை உருவாக்குவதும் தலைமையாசிரியர் கடமை என்று கூறினார். 
தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் காதர்சுல்தான், பள்ளித் துணை ஆய்வாளர் நெடுஞ்செழியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.