"அதிரை குரல்" வலைத்தளம் சார்பாக இனிய பொங்கல் நழ்வாழ்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள், குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். மார்க்கெட்களில் கரும்பு, மஞ்சள், காய்கறி விற்பனையும் ஜோராக நடந்து வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (15-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழா, போகி பண்டிகையுடன் இன்று தொடங்கியது. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற பழமொழிக்கேற்ப வீட்டில் இருந்த பழைய பொருட்களை மக்கள் இன்று அதிகாலை வீட்டு முன்பு போட்டு எரித்தனர். வீடுகளை சுத்தம் செய்து தோரணங்களால் அலங்கரிக்க தொடங்கியுள்ளனர்.
பொங்கல் பண்டிகையின்போது விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த புதுநெல் மற்றும் காய்கறிகளை சூரியனுக்கு படைத்து வணங்கி மகிழ்வது வழக்கம். கிராமப்புற மக்களில் பெரும்பாலோர் வேலை, தொழில், படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னை போன்ற நகரங்களுக்கு சென்றுவிட்டனர். அவர்கள் இதுபோன்ற பண்டிகை காலங்களில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வருவார்கள்.
அதிலும் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடவே எல்லாரும் விரும்புவர். அதற்காக குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கி விட்டனர். நேற்று முதல் சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ், ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கது.

Social Plugin