Hot Posts

6/recent/ticker-posts

அதிரையை வாட்டி வதைக்கும் குளிர்!!!


அதிரையில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது.இதனால் அதிரை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபடுகிறது.நேற்று காலை சுமார் 5 மணி நேரம் கடும் குளிர் அதிரை மக்களை வாட்டி வதைத்தது.அதே போல மாலை நேரத்திலும் கடுமையான குளிர் நிலவுகிறது.
குளிர் ஜூரத்தில் அதிரை மக்கள் பல பேர் பாதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் பள்ளி செல்லும் மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

குளிரை விட்டு நாம் எப்படி பாதுகாத்து கொள்வது பற்றி சில ஆலோசனைகள்: 
பொதுவான பாதுகாப்பு:
குளிர் காலம் என்றில்லாமல் தினமுமே குளிக்கும் போது காதுகளில் நீர் போகாமல் பார்த்துக் கொள்ளுவது அவசியம்.
காதுகளில் அழுக்கு சேர்ந்து விட்டால், நீங்களாகவே இயர் பட்ஸ் (ear buds) கொண்டு சுத்தம் செய்ய முயற்சிக்க வேண்டாம்.
  • மருத்துவரின் வழிகாட்டுதல் இல்லாமல் காதுகளுக்குள் நீர், அல்லது எண்ணெய் விடுவது போன்றவற்றைத் தவிர்க்கவும்.
  • காதுகளின் கேட்கும் திறன் போய்விட்டால், மறுபடி சரி செய்ய முடியாது. நினைவிருக்கட்டும்.
  • சில தாய்மார்கள் சிறு குழந்தைகளுக்குப் பாலுட்டும்போது காதுகளை சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் பின் அல்லது தலையில் போடும் ஹேர் பின்னை காதுகளில் நுழைப்பது உண்டு. இது மிகவும் தவறான பழக்கம்.
காதுகளில் ஏற்படும் வலிக்கு உடனடி நிவாரணத்திற்கு சில வழிகள்:
தலைக்குக் கீழ் இரண்டு அல்லது மூன்று தலையணைகளை வைத்துக்கொண்டு படுக்கவும். உட்கார்ந்த நிலையில் தலையை சாய்க்காமல் இருந்தால் காதுகளில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கலாம்.
சுயிங்கம் மெல்லுவதால் வலி குறைவதுடன், தொண்டை அடைப்பும் நீங்கும்.
சூடான பதார்த்தங்களையே சாப்பிடவும். குளிர்ந்த நீரோ, பொருட்களோ வேண்டாம். குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதால் காது தொற்று அதிகரிக்கும்.
குளிக்கும்போது காதுகளில் சிறிது பஞ்சு வைத்து கொண்டு நீர் போகாமல் பார்த்துக் கொள்ளவும்.
காதுகளுக்குப் போடும் சொட்டு மருந்தைக் கொண்டு காதுகளை சுத்தம் செய்யவும். வெதுவெதுப்பான ஜாதிக்காய் எண்ணையை காதுகளைச் சுற்றி தடவவும்.
காதுகளில் வலியோ, குடைச்சலோ அல்லது அரிப்போ ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். அவருடன் பேசுவதால் அனாவசியமான பயங்கள் விலகும். தக்க சிகிச்சையும் கிடைக்கும்.
காது, மூக்கு, தொண்டை மூன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தப் பட்டவை. இந்த மூன்றில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் மற்ற இரண்டும் பாதிக்கப்படும் சாத்தியக் கூறுகள் அதிகம். அதனால் இதற்கு என்றே இருக்கும்  ENT (Ear, nose, throat) மருத்துவர்களை நாடவும்.
உடலின் எந்தப் பகுதி பாதிக்கப் பட்டாலும் சிரமம் தான். ஐம்புலன்களில் ஒரு புலன் சரியாக வேலை செய்யவில்லையானாலும் வாழ்க்கையே பாரமாகிவிடும். எந்த வலியானாலும் நாமாகவே சுயச் சிகிச்சை செய்து கொள்ளாமல் மருத்துவரை நாடுவது நல்லது.