Hot Posts

6/recent/ticker-posts

வேண்டாம் ஆடம்பர வாழ்க்கை!!

உங்களுக்கு தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது  கொள்ளுங்கள்.!!


  • அழகான சொகுசான கார்களிலே பவனி வர விரும்புகிறீர்கள்!
ஆனால்?

ஒரு நாள் படுத்த நிலையில் தான் பவனி வருவீர்கள்!!


  • விலை உயர்ந்த அழகான ஆடைகளை அணிய விரும்புகிறீர்கள்!
ஆனால்?

இறுதியில் கஃபன் (தைக்கப்படாத வெள்ளை துண்டு) தான் உங்களுக்கு அணிவிக்கப்படும்!!


  • அறுசுவை மிகுந்த விலை மிக்க ருசியான உணவுகளிலே தான் நாட்டம் காணுகிறீர்கள்!
ஆனால்?

புழு,பூச்சிகளுக்கு உணவாக உங்கள் உடம்பு ஆகும். என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள்!!


  • அலங்காரமான அரண்மனைகளைப் போன்ற வீடுகளை கட்ட கடுமையான முயற்சியும்,தியாகங்களையும் செய்கிறீர்கள்!
ஆனால்?

உங்களுடைய உண்மையான வீடு கபருஸ்தானில் உள்ள சவக்குழி தான் என்பதை நினைவு கொள்ளுங்கள்!!


  • புகழ்க்காகவும்,பகட்டிற்காகவும்,பெருமைக்காகவும் ஆலாய் பறக்கிறீர்கள்!
ஆனால்?

தனிமையும்,இருளும் உங்களுக்காக சவக்குழியில் காத்திருக்கிறதை ஞாபகத்தில் வையுங்கள்!!

படைத்த அல்லாஹ்வினை தினந்தோறும் அஞ்சி கொள்ளுங்கள்!! 
            
                     ஆக்கம்,
            இறையடியான்,
                   அதிரை.