Hot Posts

6/recent/ticker-posts

அதிரையில் வெப்பத்திற்கு இதமாக குளு,குளு மழை!!!


"தானே" என்ற கோர புயலுக்கு பின் நமதூர் அதிரையில் காலை நேரத்தில் அதிக அளவு வெப்பமும்,மாலை நேரத்தில் கடும் குளிரும் நிலவி வந்தது.இதனையடுத்து கடந்த சில நாட்களாக அதிரையில் வெப்பம் சற்று இன்னும் அதிகமாகி மக்களை வாட்டி வதைத்தது.பனியின் தாக்கமும் குறைந்ததால் இரவு நேரத்திலும் வெப்பக்காற்று வீசியது.

இந்த வெயிலுக்கு இதமாக அதிரையில் இன்று காலையிலிருந்தே மேக மூட்டமகவும் குளிர் காற்றும் வீசியது.இதனால் வெப்ப காற்று ஓரளவு தணிந்தது.இதன் பின்னர் மதியம் 2 மணிக்கு மழை பெய்தது.இந்த மழை சுமார் அரை மணிநேரம் பெய்தது குறிப்பிடத்தக்கது.இதனால் அதிரையில் வெப்பம் முழுமையாக தணிந்துள்ளது.