கோரிக்கை மனுவை கொடுக்கும் போது எடுத்த படம்.
நமதூர் அதிரையில் உள்ள ஒன்பது முஹல்லாக்களில் “ஹஜரத் பிலால் நகர்” முஹல்லாவும் ஓன்று. ஏறக்குறைய ஆயிரத்து ஐநூறு மக்கள்கள் வசிக்கக்கூடிய இப்பகுதியில் பெரும்பாலும் ஏழை எளியோர்கள்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
இப்பகுதியில் ரேஷன்கடை இல்லாத காரணத்தால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலை தூரத்தில் இருக்கக்கூடிய அங்காடியில் அனைவரும் பொருள்கள் வாங்கிச் செல்லவேண்டிய சூழ்நிலை இருப்பதால், மிகவும் சிரமத்துக்குள்ளாகின்ற இப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு “ஹஜரத் பிலால் ( ரலி ) நகர் ஜமாத்” நிர்வாகத்திற்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை ரேஷன்கடை அமைப்பதற்கு அரசுக்கு வழங்குவது என தீர்மானம் செய்து, சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சித் துணைத் தலைவர் ஆகியோர்களிடம்“ஹஜரத் பிலால் ( ரலி ) நகர் ஜமாத்” சார்பாக கோரிக்கை மனு ஒன்றை வழங்கி, இது சம்பந்தமாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி மாவட்ட மற்றும் வட்ட உணவு வழங்கல் அதிகாரிகளுக்கு ( DSO மற்றும் TSO ) அனுப்பி ஆவணம் செய்ய அவர்களை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி,
அதிரை எக்ஸ்பிரஸ்.
Social Plugin