Hot Posts

6/recent/ticker-posts

அதிக எண்ணிக்கையில் ஹஜ் பயணம் செல்ல நடவடிக்கை!!


சட்டசபையில் இன்று துரைக்கண்ணு (அ.தி.மு.க.) கேட்ட கேள்விக்கு அமைச்சர் முகம்மதுஜான் அளித்த பதில் வருமாறு:-

ஹஜ் பயணம் செல்ல அதிக இடம் ஒதுக்க வேண்டும் என்றால் சவூதி அரேபியா அரசு கூடுதல் இடம் தந்து, மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும். முன்பு தமிழ்நாட்டில் இருந்து 2,612 பேர்தான் ஹஜ் பயணம் சென்றனர். தற்போது முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிரதமரை கேட்டுக் கொண்டதால், கூடுதலாக 1,472 பேர் ஹஜ் பயணம் செல்ல அனுமதி கிடைத்தது.

அடுத்து கேள்வி எழுப்பிய ஜவஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), மராட்டியம், கேரள மாநிலங்களில் ஹஜ் பயணிகள் செல்வதற்கு முன்பு, அவர்கள் தங்குவதற்கு அரசு ஹவுஸ் உள்ளது. ஆனால் சென்னையில் தனியார் இடங்களில்தான் தங்க வேண்டியிருக்கிறது. எனவே தமிழ்நாட்டிலும் அரசு ஹவுஸ் கட்டப்படுமா? என்றார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், 'அது குறித்து பரிசீலனை செய்யப்படும்' என்று கூறினார்.