Hot Posts

6/recent/ticker-posts

கருத்துக் கணிப்பு முடிவுகள்!!!


கடந்த ஒரு மாத காலமாக நமது அதிரை குரலில் தற்போது உள்ள பெண்கள் சமுதாயம் எதில் அதிகமான நேரத்தை செலவிடுகிறது? என்ற தலைப்பில் கருத்துக் கணிப்பு நடத்தி வந்தது.இந்த கேள்விக்கு 3 விடைகள் கொடுக்கப் பட்டிருந்தன.
1).தொலைகாட்சி 
2).மார்க்கத்தின் வழியில்
3).கருத்து இல்லை. 

இந்த விடைகளில் தொலைக்காட்சிக்குத் தான் அதிக வாக்குகள்.
பெண்கள் சமுதாயம் அதிகமாக தொலைக்காட்சியில் தான் அதிக நேரத்தை செலவிடுகிறது.
இந்த கருத்துக் கணிப்பில் சுமார் 250 க்கும் மேற்ப்பட்டோர் வாக்களித்தனர்.

இந்த கருத்துக் கணிப்பில் தொலைக்காட்சிக்கு 72% வாக்குகள் பதிவாகின.

மார்க்கத்தின் வழியில் நேரத்தை செலவிடுவது 12% வாக்குகள் பதிவாகின. 

இந்தக் கேள்விக்கு கருத்து இல்லை என 16% வாக்குகள் பதிவாகின.
----------------------------------------------------------------------------------------------------------
பெண்கள் சமுதாயம் தற்பொழுது தொலைக்காட்சியில்
தொடருக்கு அடிமையாகி விட்டது.இந்த தொலைகாட்சியில்  (SERIAL) பார்க்கும் நேரங்களில் அல்லாஹ்வின் திருமறையான திருக் குர்ஆணை ஓதலாமே!
அல்லது தங்களது பிள்ளைகளுக்கு ஓதக் கற்றுக் கொடுக்கலாமே!
இப்படியும் செய்யவில்லை என்றால் வீட்டில் தாலிம் படிக்கலாம்!

இதை எல்லாம் விட்டு, விட்டு தொலைக்காட்சியில் (SERIAL) பார்கிறார்கள்.அப்படி தொலைகாட்சியில் மூழ்கி (SERIAL) பார்ப்பதால் நமக்கு என்ன நன்மை,நமது குடும்பத்துக்கு என்ன நன்மை என்று பெண்கள் தெளிவாக சிந்தியுங்கள்.

இன்னம் சிலப் பெண்கள் (SERIAL) பார்த்துக் கொண்டு கண்ணீர் வடிக்கிறார்கள்.இப்படி அற்ப தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டு கண்ணீர் வடிக்கும் பெண்களே! சற்று சிந்தியுங்கள்.. 
இந்த அற்ப தொலைக்காட்சியை பார்த்து கண்ணீர் வடிப்பதால் உங்களுக்கு என்ன நன்மை!

அங்கு பசியால் பச்சிளம் குழந்தைகள் அலறிக்கொண்டு இருக்கும்  நிலையில்  இந்தப் பெண்கள் தொலைக்காட்சியில் தன்னையே (உலகத்தை) மறந்து அப்படியே தொலைகாட்சி (SERIAL) ல் மூழ்கி விடுகின்றனர்.

இன்னும் சிலப் பெண்கள் (தேவையற்ற ) ஆடம்பர செலவுகளை செய்கின்றனர்.
பெண்கள் ஒன்றைப் புரித்துக் கொள்ள வேண்டும்.

தனது குடும்பத்துக்காக இரவும், பகலும்  கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி உழைக்கும் ஆண்கள், ஆனால் பெண்களோ ஆடம்பர செலவுகளை செய்கிறார்கள்.

ஒரு 500 ரூபாய் சம்பாதிப்பது என்பது கூட கஷ்டப்பட்டால் தான் முடியும்.
ஆண்கள் இப்படி இரவு,பகலாக கட்டப்பட்டு சம்பாதித்து அனுப்பும் பணங்களை வீட்டில் உள்ள பெண்கள் வீண் விரையம் செய்கிறார்கள்.

இப்படி வீண் விரையம் (ஆடம்பரம்) செய்பவர்கள் நிச்சயம் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே தீர வேண்டும்.

(இன்ஷா அல்லாஹ்) இது  பற்றி தெளிவான கட்டூரை நமது அதிரை குரலில்  விரைவில் வெளிவர உள்ளது. 
படிக்கத் தவறாதீர்கள்!! 

இந்த செய்தியை உங்கள் நண்பர்களிடத்திலும் எத்தி வையுங்கள்.அல்லாஹ் உங்களுக்கு நன்மை புரிவானாக! 
ஆமீன்!