முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க மதுரை உயர் நீதிமன்றக் கிளை நேற்று உத்தரவிட்டது. தமிழக பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும்,
முன்னாள் தலைமை பொறியாளருமான விஜயகுமார், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

கேரள அரசியல்வாதிகளின் செயலால் எழுந்துள்ள பதற்றமான சூழ்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கேரளாவைச் சேர்ந்தவர்கள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அணைக்கு சென்று வருகின்றனர். இதனால், அணைக்கு செல்லும் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி மதுரை அய்யர் பங்களாவை சேர்ந்த பொதுப்பணித் துறை முன்னாள் தலைமை பொறியாளர் கனகசபாபதி தனியாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த இரண்டு மனுக்களும் நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், கருப்பையா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் சொலிசிட் ஜெனரல் ரவீந்திரன், தமிழக அரசு சார் பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், பி.ஸ்டாலின், லஜபதிராய் ஆகியோர் ஆஜரானார்கள். இந்த வழக்கில் மத்திய அரசும், கேரள அரசும் ஏற் கனவே பதில் மனுக்களை தாக்கல் செய்துவிட்டன. இந்நிலையில், தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை ஏப்ரல் 2க்கு ஒத்திவைக்கப்பட்டது.
Social Plugin