Hot Posts

6/recent/ticker-posts

தோனி-சேவாக் மோதல்:சமரச முயற்சியில் இந்திய கிரிக்கெட் வாரியம்!!


சமீபகாலமாக இந்திய அணி அதிகமாக தோல்விகளையே சந்தித்து வருவது நாம் அறிந்த ஒன்று.இதற்க்கு காரணம் யார் என்று இந்திய அணி வீரர்களுக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது.தற்பொழுது சேவாக்கிற்கும்,இந்திய அணி கேப்டன் தோனிக்கும் மோதல் எழுந்துள்ளது.இப்படி அணி வீரர்களுக்குள் மோதிக் கொண்டால் எதிர்காலத்தில் அணியில் ஒற்றுமை,வெற்றிகள் இருக்காது எனக் கருதி  இந்திய கிரிக்கெட் அணியில் ஏற்பட்டுள்ள பிளவை முடிவுக்குக் கொண்டு வரும் தீவிர முயற்சியில் பிசிசிஐ இறங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

 அணியின் ஒற்றுமையை உறுதி செய்யுமாறு தோனி, சேவாக் ஆகியோரைக் கேட்டுக்கொண்டுள்ளது பிசிசிஐ.

 
முன்னதாக அணியில் எந்த பிளவும் இல்லை. எனவே அதுபற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை என்று கூறிய பிசிசிஐ, இப்போது வீரர்களிடைய சமரசம் ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

 
இந்த விவகாரம் தொடர்பாக கேப்டன் தோனி, சேவாக், பயிற்சியாளர் டங்கன் பிளெட்சர் ஆகியோரிடம் பிசிசிஐ செயலர் சஞ்சய் ஜகதேல் பேசியுள்ளார். அப்போது அனைவரும் ஒற்றுமையோடு அணியாக இணைந்து செயல்படுமாறு அவர் கூறியதாகத் தெரிகிறது.

 
மேலும் சேவாக், தோனி இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்து மூத்த வீரர்களிடையே பிளவு ஏதும் இல்லை. எல்லோரும் ஒற்றுமையாகவே உள்ளோம் என்று தெரிவிக்கவுள்ளனர் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

 
இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்க பிசிசிஐ நிர்வாகிகள் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

 மூத்த வீரர்களான சச்சின், சேவாக், கம்பீரால் சரியாக பீல்டிங் செய்ய முடிவில்லை.

 இதனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று கூறி அவர்களை சுழற்சி முறையில் களமிறக்கும் திட்டத்தை தோனி கொண்டு வந்தார். அதன் எதிரொலியாக மூத்த வீரர்களிடையே பிரச்னை ஏற்பட்டது.

 கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ஆடும் லெவனை தேர்வு செய்வதில் தோனி, சேவாக் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.