Hot Posts

6/recent/ticker-posts

பராமரிப்பின்றி கிடக்கும் மல்லிப்பட்டினம் சிறுவர் பூங்கா:சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!

அதிரையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மல்லிப்பட்டினம்.இந்த மல்லிப்பட்டினத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவது உண்டு.மல்லிப்பட்டின மனோராவையும் காண ஏராளமானோர் அங்கு குவிவது வழக்கம்.

அங்கு உள்ள மனோரா உள்ளே செல்ல சுற்றுலா பயணிகளுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டது.காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வை நேரமாக இருந்து வந்தது.கடந்த சில வருடங்களாக அது நிறுத்தப்பட்டுள்ளது.சுற்றுலா பயணிகள் அங்கு அதிக அளவில் கூடுகிறார்கள்.


சென்னை சுற்றுலா பயணி ஒருவர் கூறியதாவது : 
   நாங்கள் அனைவரும் மதுக்கூரில் உள்ள ஒரு திருமணதிற்கு சென்னையிலிருந்து வந்திருக்கிறோம்.நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள்,மல்லிப்பட்டினம் சென்று வா மிக அருமையாக இருக்கும்,நீங்கள் திருமணதிற்கு வந்த மாதிரியும்,சுற்றுலா வந்த மாதிரியும் இருக்கும் என்றார்.அதனால் தான் நான் என் குடும்பத்துடன் இங்கு வந்திருக்கிறேன்.


இந்த மல்லிப்பட்டினம் ஒன்றும் விசேஷமாக தெரியவில்லையே என்றார்.சிறுவர் பூங்கா இருந்தும் குழந்தைகளுக்கு விளையாட முடியாத நிலை உள்ளதே என ஏமாற்றத்துடன்,வருத்தமாக கூறினார்.

இதன் பின்பு அந்த சுற்றுலாப் பயணிகள் வந்த வழியே ஏமாற்றத்துடன் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

இந்த மல்லிப்பட்டினத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கு பூங்கா இருந்தும் விளையாட முடியவில்லை.இந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் அனைத்துப் பொருள்களும்  துறு பிடித்து உடைந்திருக்கின்றது.


இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்து  மல்லிப்பட்டினத்தை புதுப் பொலிவுடன் பெற்றுத் தர வேண்டும் என்பதே மல்லிப்பட்டின ஊர்வாசிகளும்,சுற்றுலாப் பயணிகளும் எதிர்பார்கின்றனர்.

சிறுவர் பூங்காவின் முகப்புத் தோற்றம்.