Hot Posts

6/recent/ticker-posts

இலங்கையிடம் வீழ்ந்தது இந்தியா!!

தற்பொழுது ஆஸ்திரேலியாவில் முத்தரப்புத் தொடர் நடைபெற்று வருகிறது.இந்தப் போட்டியில் இந்தியா,இலங்கை,ஆஸ்திரேலியா அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.இந்தப் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதின.முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஜெயவர்தனேயும்,தில்ஷானும் களமிறங்கினர்.சற்று மந்தமாக துவக்கினாலும் பின்பு இந்திய வீரர்களுக்கு அதிரடி காட்டினர்.ஜெயவர்தேனே 45 ரன்களும்,தில்ஷான் 51 ரன்களும் எடுத்தனர்.அடுத்த விக்கெட்டாக களம் புகுந்த சங்ககாரா 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.இதன் பின் வந்த வீரர்கள் நிலையாக ஆடி ரன்களை குவித்தனர்.

இதன் பின்னர் ஆடிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.சேவாக் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
டெண்டுல்கர் 22 ரன்கள் எடுத்தார்.கோஹ்லி அற்புதமாக ஆடி 66 ரன்கள் சேர்த்தார்.அடுத்த விக்கெட்டாக வந்த ரெய்னா சற்று நிலைத்து ஆடினாலும் 32 ரன்களில் வெளியேறினார்.


நீண்ட நாட்களுக்குப் பிறகு அரங்கில் நுழைந்த இர்பான் பதான் அதிரடியாக ஆடி அணியை கஷ்டத்தின் பிடியில் இருந்து மீட்டு கொண்டு வரும்பொழுது அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழவே இந்தியாவின் தோல்வி உறுதியானது.இர்பான் பதான் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.


இறுதியாக இந்திய அணி 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ரன்கள் குவித்து 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.