Hot Posts

6/recent/ticker-posts

சட்டசபையில் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்: தேமுதிக!!

சென்னையில் இன்று (21.02.2012) தேமுதிக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேமுதிகவின் 7வது பொதுக்குழுக் கூட்டமும் நடைபெற்றது


தமிழக சட்டசபையில் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச எதிர்க்கட்சிகளுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அவையில் போதிய அவகாசமும், பாரபட்சமின்றி சம வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும். தமிழக அரசால் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பை ஏற்று, உடனடியாக வேலை வழங்க வேண்டும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சிறப்பு மருத்துவமனையாக மாற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். அரசு துறைகளில் லஞ்ச ஊழலைத் தடுக்க லோக் ஆயுக்தா  போன்ற கடுமையான லஞ்ச ஒழிப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும். 

கரும்பிற்கான கொள்முதல் விலை ரூ.2100 என நிர்ணயம் செய்யப்பட்டதற்கு தேமுதிக கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 3 ஆயிரம் ரூபாய் என்ற கொள்முதல் விலையை அரசு உடனே நிர்ணயம் செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பள்ளி ஆசிரியர் பணி நியமனம் நடைபெற வேண்டும்.

தானே புயல் பாதித்த கடலூர், விழுப்பும், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை இயற்கை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்றும் தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது