Hot Posts

6/recent/ticker-posts

வேகத்தால் விபத்து!!

சாலை விபத்து ஒரு நாளைக்கு தமிழ்நாட்டில் குறைந்தது 2000 ஆவது நடைபெறுவதை நாமும் கண்கூடாக காண்கிறோம்.செய்தித் தாள்,தொலைக்காட்சி போன்றவற்றை பார்த்தால் விபத்து இல்லாத செய்தி வராது. நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகமாகி கொண்டிருக்கிறது.இது ஏன் ஏற்படுகிறது என்றால் வாகன ஓட்டிகளின் கவனக் குறைவால் தான் என்று அடித்து சொல்ல முடியும்.


நேற்று நமதூர் அதிரை நடுத் தெருவில் பள்ளி (மதரசா) சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த ஒரு 5 வயது சிறுவனை மின்னல் வேகத்தில் வந்த கார் மோதியது.அந்த சிறுவனின் தலை முன்புறத்தில் அடி பட்டு ரத்தம் வழிந்தோடியது.அந்த கார் டிரைவர் சிறுவனை அப்படியே விட்டு,விட்டு சென்று விட்டார்.


இப்படி மின்னல் வேகத்தில் சீறிச் செல்லும் இந்த வாகன ஓட்டிகள் எதை சாதித்து விட்டார்கள்.எதை சாதித்து விட போகிறார்கள்?.

நடுத் தெருவில் அதிகமாக சாலை விபத்துகள் ஏற்படுகிறது.இதனை உடனடியாக தடுக்க வேண்டும்.அந்த இடத்தில் இரண்டு,மூன்று வேகத் தடைகள் போட வேண்டும். 
இதனை பேரூராட்சி நிர்வாகமும்,அந்த தெரு கவுன்சிலரும் இதனை சரி செய்ய வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு.