100 சதமடித்த தமது சாதனையை இந்தியர் ஒருவரே முறியடிக்க வேண்டும் என்று விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
என்னுடைய 100 சதம் சாதனையை யார் முறியடிப்பார்கள் என்பது எனக்குத் தெரியாது. கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டு இருக்கின்றன. என்னுடைய சாதனையை இந்தியர் ஒருவர் முறியடிப்பதே எனது விருப்பம்.
கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து நான்தான் முடிவு செய்ய வேண்டும். யாரோ ஒருவர் சொல்லி நான் முடிவெடுக்க விரும்பவில்லை. அதுவும் நல்ல பார்மில் இருக்கும்போது ஓய்வு பெறுவது என்பது அணிக்கு செய்கிற துரோகம் என கருதுகிறேன். என்னை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறச் சொல்லுகிறவர்கள் யாரும் என்னை இந்திய அணியில் சேர்க்கவில்லை.
என்னுடைய பலமாக என்னுடைய குடும்பத்தினரையும் எனது பயிற்சியாளர்களையுமே கருதுகிறேன். எப்போது எனது பலம் குறைந்துவிட்டதாக நான் கருதுகிறேனோ அப்போது ஓய்வு பெற்றுவிடுவேன்.
நான் 100-வது சதமடித்த நாளில் வங்கதேசத்திடம் தோற்றுப்போனோம். அதனால் 100வது சதமடித்ததை கொண்டாடவில்லை. என்னைப் பொறுத்தவரையில் போட்டியின் முடிவுதான் முக்கியம். அதைத்தான் ஒரு விளையாட்டு வீரன் விரும்புவான்.
எனக்கு ஹீரோ என்றால் எனது தந்தைதான். நான் என் தந்தையைத்தான் பின்பற்றுகிறேன். அவரது விருப்பப்படியே நடந்துகொள்கிறேன்.
ஆசியக் கோப்பை போட்டிகளைப் பொறுத்தவரையில் இந்தியா விரைவிலேயே வெளியேறிவிட்டது. இதற்குக் காரணம் எதிர்த்து விளையாடிய அணிகள்தான். அவர்கள் நன்றாக ஆடியதால்தான் இந்தியா தோற்றது. சில நேரங்களில் நாம் நன்றாக ஆடுவோம். எதிர் அணியும் நன்றாக விளையாடும். வங்கதேசத்தைப் பொறுத்தவரையில் 4 போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தினர்.
என்னுடைய திறமையை நிரூபித்தாக வேண்டிய நிலைமை என்று எதுவும் இப்போது இல்லை. கிரிக்கெட்டை நான் ஆழமாக நேசித்தேன். மகிழ்ச்சியோ ரசித்து விளையாடி வருகிறேன். என்னுடைய ஒரே கனவு... உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும்போது நானும் அணியில் இருக்க வேண்டும் என்பதுதான். இதைவிட பெரிய எதிர்பார்ப்பு, கனவு எதுவும் எனக்கு இல்லை. உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவுக்காக என்னால் விளையாட முடியும். உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்று கருதுகிறேன் என்றார் சச்சின்.

Social Plugin