Hot Posts

6/recent/ticker-posts

கூடங்குளம் அணு உலை போராட்டத்தில் நக்சலைட் தீவிரவாதிகள்?- போலீஸ் தகவல்!!

கூடங்குளம் எதிர்ப்பு போராட்ட குழுவில் சதிஷ் குமார், முகிலன், வன்னியரசு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட மூவரில் சதீஷ் மற்றும் முகிலன் இருவரும் நக்சலைட் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், நக்சலைட் கும்பலுடன் வன்னி அரசு தொடர்பு வைத்திருப்பதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் போராட்டக்காரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இடிந்தகரையில் மேலும் சில நக்சலைட்டுகள் இருப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தின் நந்தி கிராமத்தில் இரசாயன ஆலை அமைக்க அரசு நிலம் ஒதுக்கியது. ஆனால் ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். போலீஸ் விசாரணையில் விவசாயிகளுக்கும் நக்சலைட் கும்பல்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. நக்சலைட்டுகளின் பின்னணியிலேயே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரிய வந்தது.
இந்நிலையில் நந்தி கிராம பாணியில் கூடங்குளம் மக்கள் செயல்படுகிறார்களா? எனும் சந்தேகமும் போலீசுக்கு எழுந்துள்ளது.
ஏனென்றால் போராட்டக்காரர் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஏற்கனவே தங்களுக்குப் பின் போராட்டம் நடத்த இளைஞர் படை இருப்பதாக தெரிவித்திருந்தார். இளைஞர் படை என்று உதயகுமார் கூறியது நக்சலைட்டுகளைத் தான் எனும் சந்தேகமும் போலீசுக்கு வலுத்துள்ளது.
ஆனால் பிடிப்பட்டவர்கள் நக்சலைட் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் என போலீஸ் தரப்பில் கூறுவதற்கு கூடங்குளம் மற்றும் இடிந்தகரை மக்கள் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.