Hot Posts

6/recent/ticker-posts

இன்று டுவென்டி 20:தென் ஆப்ரிக்காவை வீழ்த்துமா இந்தியா?


தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் குடியேறி 150 ஆண்டுகளான நினைவை கொண்டாடும் வகையில் இன்று தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டுவென்டி 20 போட்டியில் இந்தியா வெற்றிப் பெற வேண்டும் என்று தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தென்ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் குடியேறி 150 ஆண்டுகள் கடந்துவிட்டது. இதனை கொண்டாடும் வகையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒரு டுவென்டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெற உள்ளது.

இதற்காக டோணி தலைமையிலான இந்திய அணி நேற்று முன்தினம் மும்பையில் இருந்து ஜொஹன்னஸ்பர்க் நகருக்கு புறப்பட்டு சென்றது. இந்திய நேரப்படிஇன்று இரவு 9 மணிக்கு போட்டி துவங்க உள்ளது.

இரு அணிகளும் 5 டுவென்டி20 போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் 4 போட்டிகளில் இந்தியாவும், 1 போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றிப் பெற்றுள்ளன.


வெளிநாட்டு மண்ணில் சமீபகாலமாக தோல்விகளை சந்தித்து வரும் இந்தியா, கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய டுவென்டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமம் செய்தது.

மேலும் டுவென்டி20 தரவரிசைப் பட்டியலில் 7 இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியி்ல் இந்தியா வெற்றிப் பெறும் பட்சத்தில் இந்தியா 6 இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.

தென் ஆப்பிரிக்காவை பொறுத்த வரை நியூஸிலாந்திற்கு எதிரான டுவென்டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முழுதிறனுடன் உள்ளது. நாளைய போட்டியி்ல் தென் ஆப்பிரிக்கா வெற்றிப் பெற்றால், டுவென்டி20 போட்டிகளின் தரவரிசையில் 4வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.



இந்திய அணியில் துவக்க வீரர் ஷேவாக், வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர்கான், சச்சின் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சச்சினுக்கு பதிலாக ராபின் உத்தப்பா அணியில் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளார். மற்றபடி ஆசிய கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட அணி அப்படியே களமிறங்க உள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணியி்ல் பெரும்பாலான மூத்த வீரர்களுக்கு நாளைய போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் காலீஸின் திறமை பாராட்டி போட்டிக்கு பிறகு அவருக்கு வெகுமதி அளிக்கப்படும்.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களை மகிழ்விக்கும் வகையில் இன்றைய டுவென்டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.