Hot Posts

6/recent/ticker-posts

பட்டுக்கோட்டை- தஞ்சை- அரியலூர் அகல ரெயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தல்: போராட்ட குழுவினர் தீர்மானம்!!

பட்டுக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு பட்டுக்கோட்டை-தஞ்சாவூர்- அரியலூர் அகலரெயில் பாதை போராட்ட குழு செயல்பட்டு வருகிறது. இதன் கூட்டம் கந்த கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் டாக்டர் செல்லப்பன், செயலாளர் பாலசுந்தரம், துணைச்செய லாளர் இமானுவேல்ராஜ், ராஜேந்திரன், திருமுருகன், பொருளாளர் ஜெயசீலன், ஓருங்கிணைப்பாளர்கள் திரு ஞானம், பக்கிரிசாமி மற்றும் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
1946-1949 ஆம் ஆண்டில் முதல்முறையாக சர்வே செய்யப்பட்டு, தொடர்ந்து 1996-2000 ஆம் ஆண்டில் மீண்டும் சர்வே செய்யப்பட்டு தனிப்பட்ட சிலரின் வியாபார லாப நோக்கத்திற்காக (பட்டுக்கோட்டை-தஞ்சை தனியார் பேருந்து உரிமை யாளர்கள்) அரசு அதிகாரிகள் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். பல லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டு கிடப்பில் போட்டப்பட்டுள்ள இந்த திட்டத்தில் நடந்து முடிந்துள்ள பணிகள், நிலம் சர்வே செய்யப்பட்டு நிலம் ஒதுக்கீடு பணிகள் முடிந்து ரெயில்வே கையகப்படுத்தி விட்டது. அதற்கு ஆதாரமாக கிராம பதிவேடுகளில் அவை பதிவும் செய்யப்பட்டுள்ளன.
 
இத்திட்டத்திற்கு 2000 ஆம் ஆண்டின் சர்வே படி ரூ.100 கோடி மட்டுமே செலவுதொகை கணக்கிடப் பட்டது. தஞ்சை, ஒரத்த நாடு, பாப்பாநாடு, பட்டுக்கோட்டை உள்பட 5 ரெயில் நிலையங்கள் முடிவு செய்யப்பட்டு அதில் பட்டுக்கோட்டை, தஞ்சை தவிர மற்றவை கிராமப்புற ரெயில் நிலையங்களாக மட்டுமே கட்டவேண்டும். அடிப்படை பணிகள் எல்லாம் முடிந்து நிதி ஓதுக்கீடு செய்து பணிகள் தொடங்க வேண்டியது மட்டுமே உள்ளது. இதற்கிடையே பட்டுக் கோட்டை, மன்னார்குடி ரெயில் பாதை திட்டத் திற்கு ரூ.140 கோடி ஒதுக்கப் பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு இனிமேல்தான் நிலம் கைய கப்படுத்தி, சர்வே செய்தல் என ஆரம்ப கால கட்ட பணிகளே இன்னும் தொடங்கப்படவில்லை.
 
தற்போதைய பொருளாதார மற்றும் சந்தை சார்ந்த வளர்ச்சி பணிகளில் பட் டுக்கோட்டை முழுவதும் தஞ்சையை சார்ந்தே உள்ள தால் பட்டுக்கோட்டை தஞ்சை ரயில்பாதைபணி அடிப்படை தேவையாக கரு தப்படுகிறது. தமிழகத்தில் மற்ற பகுதிக ளில் இருந்து பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட் டிணம், முத்துப்பேட்டை மற்றும் மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகள் அதனை சார்ந்த 100-க்கணக்கான இரண்டாம் கட்ட கிராமங்கள், தொடர்ந்து குக்கிராமங்கள் எல்லாம் வளம் பெற வாய்ப்பு இருக்கிறது.
 
தஞ்சையில் பணிபுரியும் ஊழியர்கள், படிக்கும் மாணவ- மாணவியர்கள் பெருமளவில் இந்த பகுதியில் இருந்து செல்வதால் தனியார் பேருந்துகள் காலை மற்றும் மாலை நேரங்களில் குப்பை வண்டிகளை போல மக்களை திணித்து செல்கின்றன. சில நிமிட இடைவெளி மட்டுமே அடுத்தடுத்த பேருந்து களுக்கு இடையில் இருப்பதால் உயிரை பணயம் வைத்தே பஸ்கள் இயக்கப் படுகிறது. இதனால் விபத்துக்களும் அடிக்கடி நடை பெறுகிறது. சிலரை திருப்தி படுத்துவதற்காக அரசு அதி காரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டதாக பொதுமக்கள் கருதுகின்றனர். 
 
பல ஆண்டுகளாக தனித்து நின்று இத்திட்டத்திற்காக குரல்கொடுத்த அனைத்து அமைப்பினரும் ஒன்றிணைந்த பட்டுக்கோட்டை- தஞ்சை-அரியலூர் அகல ரெயில் பாதை போராட்ட குழுவை அமைத்து பெரிய அளவில் போராட திட்டமிட்டுள்ளனர். இந்த குழுவினர்  மார்ச் 19-ந்தேதி (திங்கட்கிழமை) காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணிவரை போராட்டத்தின் முதல் அடையாள பேராட்டமாக ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
 
தஞ்சை மாவட்டம் முழு வதும் அனைத்து நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் போராட்டகுழு அமைத்து தீவிரமாக முழுமையான அளவில் போராட்டம் நடத்தி மத்திய, மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு வகையிலும் போராட போரட்ட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.