Hot Posts

6/recent/ticker-posts

ஆசிய கோப்பை யாருக்கு?: பாகிஸ்தான்-வங்காளதேசம் நாளை மோதல்!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த கடைசி “லீக்” ஆட்டத்தில் வங்காளதேசம் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. வங்காளதேசம் வெற்றி பெற்றதால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

லீக்” முடிவில் பாகிஸ்தான் 9 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தது. அந்த அணி 2 வெற்றி பெற்றது. ஒரு ஆட்டத்தில் தோறற்து. இலங்கைக்கு எதிராக போனஸ் புள்ளி பெற்று இருந்தது. இந்தியா, வங்காளதேச அணிகள் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் தலா 8 புள்ளிகள் பெற்றன.

லீக் ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேசத்திடம் தோற்று இருந்தது. இதனால் வங்காள தேசம் 2-வது இடத்தை பிடிந்தது. முதல் இரண்டு இடங்களை பிடித்த பாகிஸ்தான்- வங்காளதேசம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

இலங்கை அணி தான் மோதிய 3 ஆட்டத்தில் தோற்றது. புள்ளி எதுவும் பெறவில்லை. இந்தியா, இலங்கை அணிகள் வெளியேற்றப்பட்டன. பாகிஸ்தான்- வங்காளதேசம் அணிகள் மோதும் இறுதிப்போட்டி டாக்காவில் நாளை (22-ந்தேதி) நடக்கிறது.

பாகிஸ்தான் அணி லீக் ஆட்டங்களில் வங்காள தேசம், இலங்கையை வென்றது. இந்தியாவிடம் தோற்றது. வங்காளதேச அணி இந்தியா, இலங்கை அணிகளை வென்று இருந்தது. பாகிஸ்தானிடம் தோற்றது இருந்தது. வங்காளதேச அணி முதல் முறையாக ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

உள்ளூர் ரசிகர்களிடம் ஆதரவுடன் அந்த அணி முதல் முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. வங்காளதேச அணி எல்லா வகையிலும் பாகிஸ்தானுக்கு சவால் கொடுத்து விளையாடும்.

பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையை ஒரு முறை கைப்பற்றி உள்ளது. 2000-ம் ஆண்டு அந்த அணி சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது. தற்போது 2-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.

நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. நியோ கிரிக்கெட் சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.