பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொது தேர்வு ரிசல்ட் வெளிவரும் நாட்களில் உற்சாகமாய் சிரிக்கும் மாணவிகளின் போட்டோக்கள் பத்திரிகைகளில் பக்கத்துக்கு பக்கம் வெளியாகும். பார்ப்பதற்கே ஆசையாய் இருக்கும். அதே போன்ற உற்சாக சிரிப்புடன் கூடிய மாணவியின் முகம் ஒன்று, ‘மாணவி தற்கொலை’ என்ற செய்திக்கு நடுவே. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியின் பிளஸ்1 மாணவர்கள் பார்த்திபன், ரோகிணி. நட்பாக பழகி வந்திருக்கிறார்கள். சக மாணவன், மாணவி பேசிக் கொள்வதை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பவர்கள் எண்ணிக்கை நிறைந்த சமூகம் இது. இருவரும் பேசிக்கொள்ள கூடாது என்று இரு வீட்டாரும் தடை போட்டிருக்கிறார்கள்.
அடுத்த ஆண்டு பிளஸ்2 என்பதால் பள்ளிக்கூடத்தில் ஸ்பெஷல் கிளாஸ் வைத்திருக்கிறார்கள் என்று வீட்டில் சொல்லிவிட்டு இருவரும் ஞாயிறன்று பழவேற்காடு வந்துள்ளனர். இருவரும் ஒன்றாக நடந்து வருவதை உறவினர்கள் சிலர் பார்த்து கண்டித்திருக்கிறார்கள். அப்பா, அம்மாவுக்கு தெரிந்தால் சும்மா விடமாட்டார்கள் என்று பயம் வந்திருக்கிறது. திருஆயர்பாடி ரயில் நிலையம் அருகே நடந்து வந்தபோது, கொரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்தனர். சம்பவ இடத்திலேயே மாணவி ரோகிணி பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பார்த்திபன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
ரோகிணியின் நோட்டு புத்தகத்துக்குள் ஒரு கடிதம். ‘நானும் பார்த்திபனும் ஒரே பள்ளியில் படிக்கிறோம். அடிக்கடி ஒன்றாக உட்கார்ந்து படிப்போம். பார்ப்பவர்கள் எங்களை காதலர்கள் என்று தவறாக நினைக்கிறார்கள். நாங்கள் அப்படி பழகவில்லை. அண்ணன் - தங்கையாகத்தான் பழகினோம். பள்ளியிலும் தவறாக பேசுகிறார்கள். எனவே தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த கடிதம் உங்கள் கையில் கிடைக்கும்போது நாங்கள் உயிருடன் இருக்கமாட்டோம்’ என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது. டீன்ஏஜில் இருக்கும்போது கல்வி, காதல், உடல் கவர்ச்சி என எல்லாம் குழப்பமாகத்தான் இருக்கும். செய்வதெல்லாம் சரியென்று தோன்றும். அட்வைஸ்கள் எல்லாம் எரிச்சலாய் தோன்றும்.
அப்படிப்பட்ட மனநிலையில் இருப்பவர்களுக்கு அப்பாவும் அம்மாவும் ஒரு நல்ல நண்பனாய் இருக்க வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என கண்டிப்பதும் தண்டிப்பதும் பிரச்னையை தீர்த்துவிடாது. மாறாக, அதிகரிக்கவே செய்யும். ‘உற்றார், உறவினர், ஊரார் ஆயிரம் சொல்லட்டும். உன் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. அதே நேரம், என் நம்பிக்கையை போக்கிவிடாதே. படிப்பில் கவனம் செலுத்தினால், நல்ல வாழ்க்கை அமையும்’ என்று எடுத்து சொல்லும் பொறுப்பு பெற்றோர்க்கு உள்ளது.

Social Plugin