Hot Posts

6/recent/ticker-posts

ஒசாமாவை கடலில் தூக்கிப் போடப் பயன்படுத்திய அணுசக்தி கப்பல் விருந்தில் ஜெயலலிதா!!

சென்னை வந்துள்ள அமெரிக்க அணு சக்தி கப்பலில் சிறப்பு விருந்தில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.


ஆளுநர் கே ரோசய்யா உள்பட மேலும் 30 விவிஐபிக்கள் இந்த விருந்தில் பங்கேற்க உள்ளனர்.

யுஎஸ்எஸ் கார்ல் விஷன் என்ற பெயரில் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது அமெரிக்காவின் அணுசக்தி கப்பல்.

இந்தக் கப்பலைப் பயன்படுத்திதான் அல் காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் உடலை அமெரிக்க வீரர்கள் கடலில் தூக்கி எறிந்தனர். அந்த வகையில் இந்தக் கப்பல் ஏக பிரபலம்.

2012-ம் ஆண்டுக்கான இந்திய - அமெரிக்க கடற்பயிற்சிக்காக இப்போது சென்னை வந்துள்ள இந்த அணுசக்தி கப்பல் இன்னும் சில தினங்கள் இங்கேயே நங்கூரமிடுகிறது. நாளை மறுதினம் இந்தக் கப்பலில் பெரும் விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த விருந்தில் முதல்வர் ஜெயலலிதாவும் பங்கேற்க வேண்டும் என கப்பல் நிர்வாகம் கேட்டுக் கொள்ள, உடனடியாக சம்மதித்துள்ளார் ஜெயலலிதா.

ஆனால் இதே ஜெயலலிதா, கடந்த 2007-ம் ஆண்டு, இதே போன்றதொரு அணுசக்தி கப்பல் சென்னையை நெருங்கியபோது, அது ஆபத்தானது, சென்னையை அணுக்கதிர் வீச்சு பாதிக்கும் என எதிர்ப்புக் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.