Hot Posts

6/recent/ticker-posts

"இன்னிக்கு சேவாக்கை கட்டுப்படுத்திட்டா நாங்க ஜெயிச்சிடுவோம்!' - வெட்டோரி!!


பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் ராயல்சேலஞ்சர்ஸூம் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் சேவாக்கின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தினால் நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்று பெங்களூர் ராயல்சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் வெட்டோரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் பயிற்சி மேற்கொண்ட போது செய்தியாளர்களிடம் வெட்டோரி கூறியதாவது:

எங்களது பீல்டிங் மிகவும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். டெல்லி அணித் தலைவர் வீரேந்திர சேவாக்கின் ஆட்டத்தை கட்டுப்படுத்தினாலே போதும் என கருதுகிறோம். எங்களது வியூகத்தில் அதுவும் ஒன்று. சேவாக்குக்கு எதிராக விளையாடுவது ரொம்பவும் கடினமான ஒன்று. அவர் நல்ல பேட்ஸ்மேன் மட்டுமல்ல வேகமான ஸ்பின் பவுலரும் கூட.

கடந்த் ஆண்டுகளைப் போல் இல்லாமல் இந்த ஆண்டு எமது அணியில் நல்ல வீரர்கள் இருக்கின்றனர். குறிப்பாக மெக்டொனால்ட், வினய்குமார் ஆகியோர் இணைந்திருப்பது பலமானதாக கருதுகிறோம். இதேபோல் இளம் வீரர் ஹர்ஷால் படேலும் எங்கள் அணியில் இணைந்திருக்கிறார். ஜாஹிர் கானைப் பொறுத்தவரையில் மெல்ல தேறிவருகிறார்.

இதேபோல் கெய்ல்... டி-20 ஆட்டங்களில் நன்றாக விளையாடக் கூடியவர். தென்னாப்பிரிக்காவுடனான போட்டிகளில் காயம் காரணமாக அவர் எங்களுடன் இணையவில்லை... ஆனால் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்ற துடிப்பு மிக்கவர் கெய்ல் என்றார் வெட்டோரி.

இதுதவிர உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் எங்களுக்கு பலமானதாக இருக்கும்.