Hot Posts

6/recent/ticker-posts

இன்று நடக்கும் போட்டியில் முதல் வெற்றி பெறுமா? சென்னை அணி!!


 சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் டோனிக்கும் இன்று டெக்கான் சார்ஜர்ஸூடன் மோத உள்ள விசாகப்பட்டினம் மைதானத்துக்கும் நல்ல "ராசி" இருக்கிறது..

7 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் டோனி அறிமுகமான காலம்.. தனது முதல் 4- ஒரு நாள் போட்டிகளில் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாக டோனி விளையாடவில்லை.

2005-ம் ஆண்டு விசாகப்பட்டினம் மைதானத்தில் பாகிஸ்தானுடன் ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இது டோனிக்கு 5-வது போட்டி. இந்த விசாகப்பட்டினம் மைதானம்தான் டோனியின் விஸ்வரூபத்தை உலகுக்கு வெளிப்படுத்தியது என்று சொல்லுமளவுக்கு அசத்தலாக ரன் வேட்டையாடினார் டோனி!

விசாகப்பட்டினம் மைதானத்தில் டோனி குவித்த ரன்கள் 148. இதில் அற்புதமான 4 சிக்சர்கள், 15 பவுண்டரிகள் அடங்கும். இந்தப் போட்டியின் வெளிச்சத்தில்தான் இன்றுவரை டோனி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

டெஸ்ட் ரேங்க், ஒருநாள் போட்டி ரேங்க், உலகக் கோப்பை போட்டி, ஐ.பி.எல். சாம்பியன் என சகல புகழையும் சேர்த்துக் கொண்டிந்த டோனிக்கு கடந்த ஒருவருடமாக "ஏழரை சனி" இறுதிக் காலம் மாதிரியான பாதிப்பு..

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களும் சரி.,, ஆசியக் கோப்பையும் சரி... ஐ.பி.எல். முதல் போட்டியும் சரி.. எல்லாமே தோல்வி முகம்தான்...

எல்லாம் போகட்டும்.. அவரது திறமையை முழுமையாக வெளிப்படுத்திய விசாகப்பட்டினம் மைதானத்திலிருந்தாவது தொடர் தோல்விகளிலிருந்து டோனி மீண்டும் மீள்வாரா?