Hot Posts

6/recent/ticker-posts

ஐ.எபி.எல். கலை நிகழ்ச்சி: வயிற்றெரிச்சலில் லலித் மோடி- லண்டனிலிருந்து டிவிட்டரில்கடுப்பு

சென்னையில் நடைபெற்ற ஐ.எபி.எல். கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா கலைநிகழ்ச்சிகள் தமக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக வயிற்றெரிச்சலைக் கொட்டியிருக்கிறார் ஐ.பி.எல்.லை உருவாக்கிய லலித் மோடி.

ஐ.பி.எல். போட்டிகளை உருவாக்கி இதன் தலைவராகவும் சில ஆண்டுகளும் இருந்தவர் லலித் மோடி. நிதி மோசடி குற்றச்சாட்டுகளுக்குள்ளான நிலையில் லண்டன் போனவர் அங்கேயே பதுங்கிக் கொண்டார்.

இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்டமான கலகலப்பான ஐ.பி.எல். தொடக்க விழா கலைநிகழ்ச்சிகளைப் பார்த்து வயிற்றெரிச்சல்பட்டு டிவிட்டர் சமூக வலைதளத்தில் கடுப்படித்திருக்கிறார் லலித் மோடி.

"ஏன் இந்த மைதானத்தில் நடத்துனாங்க..."

"இதைவிட வேற நல்ல வடிவம் கிடைக்கலையா..."

"நானெல்லாம் தலைவராக இருந்தப்ப..."

"என்னப்பா.. இதெல்லாம் ஒரு தொடக்க விழாவா" என்கிற ரேஞ்சுக்கு டிவிட்டரில் தட்டிவிட்டுப் போயிருக்கிறார் மோடி..

பார்வையாளர்கல் பதிலடி

லலித் மோடியின் இத்தகைய கருத்துக்கு டிவிட்டரிலும் சரி..இச்செய்தி வெளியான இணையதளங்களிலும் சரி.. மோடியை விளாசிவிட்டிருக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்..

"வாயை மூடிக்கொண்டு லண்டனில் இருந்து போட்டியை பார்க்கட்டும்" என்றும் கடுமையாகவும் லலித் மோடியை விமர்சித்திருக்கின்றனர்.