Hot Posts

6/recent/ticker-posts

உலகிலேயே சிறந்த டுவென்டி20 தொடர், ஐபிஎல் தான்- பாக். வீரர் ஷாகித் அப்ரிடி புகழாரம்

சர்வதேச அளவில் நடைபெறும் உள்ளூர் டுவென்டி20 தொடர்களில், இந்தியாவில் நடைபெறும் ஐபில் தொடர் தான் மிகவும் சிறந்தது என்று பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷாகித்   அப்ரிடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிடி (32). அதிரடி பேட்டிங் மற்றும் சுழல் பந்துவீ்ச்சின் மூலம் எதிரணியினரை மிரட்டுபவர். பாகிஸ்தானில் வளரும் இளம் கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மோயின் கான் அகடமி என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த அகடமியின் நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி கலந்து கொண்டு பேசினார்.
இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளின் உள்ளூர் டுவென்டி அணிகளில் விளையாடியுள்ள அப்ரிதி, இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு நிகரான தொடர் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
உலகிலேயே ஐபிஎல் ஒரு சிறந்த தொடர். இதில் விளையாடும் போது, போட்டியை அனுபவித்து ஆட முடியும். ஆனால் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் ஒருமுறை மட்டுமே விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பல வெளிநாட்டு வீரர்களை கொண்டு விளையாடப்படும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது ஒரு வித்தியாசமான அனுபவம்.
ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. வருங்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் நீங்கும் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், தங்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க உள்ளூர் போட்டிகள் உதவும் என்று நம்புகிறேன்.
இலங்கையில் நடைபெற உள்ள ஸ்ரீலங்கன் லீக் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணியின் இளம்வீரர்களுக்கு சிறந்த பயிற்சி கிடைக்கும். மேலும் இந்த பயிற்சியின் மூலம் இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட முடியும் என்றார்.