Hot Posts

6/recent/ticker-posts

அதிரையில் பலத்த மழை!!!

கடந்த சில நாட்களாக  அதிரையில் வெயில் வாட்டி  வதைத்தது.இதனால் வெப்பம் அதிகமாகி இரவில் புழுக்கம் ஏற்பட்டது.இந்த நிலையில் இரவு நேரங்களில் மின் தடை செய்வதால் அதிரை மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

இன்று மாலை 6 மணிக்கு அதிரையில் மேக  மூட்டமாக காட்சியளித்தது.பின்னர் சரியாக 7 மணிக்கு பெய்ய  ஆரம்பித்த மழை  ஒரு மணி நேரம் பெய்ததால் அதிரை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தற்பொழுது மழை பெய்துள்ளதால் வெப்பம் ஓரளவு தணிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.