கடந்த 5 வார காலமாக அதிரையை வெயில் வாட்டி வதைத்து வந்தது.வெயில் வாட்டி வதைப்பது ஒருபுறம் இருந்தாலும்,மின் தடையும் அதிகமாக இருந்து வந்தது.இதனால் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இன்று மாலை 4.30 மணியளவில் அதிரையில் பயங்கர காற்றுடன் கருமேகங்கள் திரண்டு வந்தன.நேற்று சென்னையை புரட்டி எடுத்தது போன்று அதிரையையும் புரட்டி எடுக்கும் என்று பொது மக்கள் அச்சம் அடைந்தனர். ஆனால் 15 நிமிடம் மட்டுமே மழை பெய்தது.15 நிமிடம் பெய்த சாரல் மழைக்கே அதிரை ஊட்டி போல குளிராக காட்சியளிக்கிறது.இதனால் அதிரை மக்கள் வெப்பத்திடம் இருந்து மீண்டு மகிழ்ச்சியில் உள்ளனர்.
தற்பொழுது அதிரையில் குளிர் நிலவுவதால் இரவில் மழை வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத காரணத்தால் மாலை 5 மணிக்கே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டு செல்கின்றனர். (இடம் : பட்டுகோட்டை செல்லும் சாலை )
புகைப்படங்கள் : M.I.அப்துல் வஹாப்.
|
Social Plugin