Hot Posts

6/recent/ticker-posts

எம்.எஸ்.எப்.கன்வென்ஸன் மாநாடு கேரளாவில் நாடக்கின்ரது

எம்.எஸ்.எஃப்.தேசிய கன்வென்ஷன்
2016 நவம்பர் 12 சனிக்கிழமை கேரள பாலக்காட்டில் நடக்கிறது

தமிழ்நாட்டிலிருந்து 200 பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்
டெல்லியில் 21-07-2016-ல் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானப்படி, முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்.) தேசிய கன்வென்ஷன்  வரும் 2016 நவம்பர் 12 சனிக்கிழமை கேரள மாநிலம்  பாலக்காடு நகரில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

12-11-2016 காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் எம்.எஸ்.எஃப். தேசிய கன்வென்ஷனில் எம்.எஸ்.எஃப். அமைப்புக்கான அமைப்பு விதிகள் வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவிருக்கிறது.
எம்.எஸ்.எஃப். அமைப்பின் புதிய சட்டவிதிகளுக்கு உட்பட்ட விதத்தில் எம்.எஸ்.எஃப். தேசிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவிருக்கி றார்கள்.

2016 நவம்பர் 12-க்கு பிறகு எம்.எஸ்.எஃப். அமைப்பு தேசிய அளவில் உருவாக்கப்பட்டதாக அமையும். எல்லா மாநிலங்களிலும் எம்.எஸ்.எஃப். கிளைகள் உருவாகவும், எல்லா பல்கலைக்கழகங்களிலும், எல்லா கல்லூரிகளிலும், எல்லா தொழிற்கல்விக் கூடங்களிலும் மற்றும் அனைத்து கல்விச் சாலைகளிலும் உள்ள மாணவ, மாணவியருக்கு எம்.எஸ்.எஃப். அமைப்பு உருவாக்கப்பட்டு அவர்களின் பிரச்சனைகளை தேசிய அளவில் முன்னெடுத்துச் செல்லும் புதிய வரலாறு உதயமாகப் போகிறது.

பாலக்காடு தேசிய எம்.எஸ்.எஃப். கன்வென்ஷனில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய, மாநிலங்களின் நிர்வாகிகள், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சிறந்து விளங்கும் கல்வியாளர்கள், மத்திய - மாநில கல்வித் துறைகளில் சாதனை படைத்துள்ள தலை சிறந்த நிர்வாகிகள், ஒத்த கருத்துடைய பிற அரசியல் இயக்கத் தலைவர் கள், பள்ளி, மதரஸா, கல்லூரி, தொழிற்கல்விக்கூடம், பல்கலைக் கழக மாணவப் பிரதிநிதிகள் எல்லோரும் பங்கேற்கும் இந்த வரலாற்றுச் சிறப்புடைய எம்.எஸ்.எஃப். கன்வென்ஷனில் பங்கு பெறுவது அரியதொரு வாய்ப்பாகும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில குற்றாலப் பொதுக்குழுவின் தீர்மானப்படி எம்.எஸ்.எஃப். தேசிய கன்வென்ஷனில் தமிழ்நாட்டிலிருந்து குறைந்தபட்சம் இருநூறு மாணவர் பிரதிநிதிகள் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு மாவட்டங்கள் 50-லிருந்து மாவட்டத்துக்கு நான்கு பிரதிநிதிகள் என்ற அளவில் பங்கேற்றால் இருநூறு பிரதிநிதிகள் ஆகி விடும்.
2016 நவம்பர் 12 சனிக்கிழமை நடைபெறவுள்ள எம்.எஸ்.எஃப். தேசிய கன்வென்ஷனில் கலந்து கொள்ள விரும்பும் தமிழக எம்.எஸ்.எஃப். பிரதிநிதிகள் தங்களின் பெயர், முகவரி, கைபேசி, தொலைபேசி எண் போன்ற விவரங்களை மாநில தலைமை நிலையத்துக்கு இப்போதிருந்தே அனுப்பி வைத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். போக்குவரத்து மற்றும் தங்கும் வசதிக்கான செலவினங்களுக்காக ஒவ்வொரு பிரதிநிதியும் ரூ.200/- (இருநூறு) கட்டணமாக சென்னை தலைமை நிலையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
எம்.எஸ்.எஃப். தேசிய கன்வென்ஷன் சம்பந்தமான விவரங்களுக்கு பின்வரும் எம்.எஸ்.எஃப். நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு எம்.எஸ்.எஃப். மாணவப் பிரதிநிதிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த விவரங்கள் யாவும் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் அறிவிப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
        
( ஒப்பம்) கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், எம்.எல்.ஏ.,
         மாநில பொதுச் செயலாளர்
                  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,    தமிழ்நாடு
தகவல் தொடர்புக்கு:
1)  பழவேற்காடு எம். அன்சாரி - 9003240906
     ( மாநிலச் செயலாளர், எம்.எஸ்.எஃப்.)
2)  புளியங்குடி முஹம்மது அல்-அமீன் - 9791661906
     (மாநில  இணைச் செயலாளர், எம்.எஸ்.எஃப்)
3)  லால்பேட்டை ஏ.எஸ். அஹ்மது - 9994977803
      (மாநில இணைச் செயலாளர், எம்.எஸ்.எஃப்)
4)  திருச்சி அன்சர் அலி - 9976280443
     (மாநில இணைச் செயலாளர், எம்.எஸ்.எஃப்)
5)  வாணியம்பாடி எஸ்.ஹெச்.முஹம்மது அர்ஷத் - 8220228781
      (மாநில இணைச் செயலாளர், எம்.எஸ்.எஃப்)