Hot Posts

6/recent/ticker-posts

மாற்று திறனாளிக்கு தனதுஒய்வுதியத்தை வழங்கிய முஸ்லிம்லீக் தலைவர்

ஓய்வூதியத்தை மாற்றுத் திராணிகளுக்கு வழங்கிய,
தாய்சபையின் தேசிய தலைவர் முனிருல்மில்லத் பேராசிரியர் K.M.காதர் மொய்தீன் Ex.M.P.அவர்கள்,

ஆய்குடி அமர்சேவா சங்க வாளாகத்தில் சிந்தனைசெல்வர் சிராஜூல்மில்லத் நினைவரங்கை திறந்து வைத்து பேசுகையில்,
சமுதாய சட்டமன்ற உறுப்பினர் Kam முஹம்மது அபூபக்கர் M.L.A.அவர்கள் தொகுதியில் ஆற்றும் பணி குறித்து பாராட்டினார்கள்.
234சட்டமன்ற உறுப்பினர்களும் இவ்வாறு செயல்பட்டால் தமிழகம் வளர்ச்சி பெற்று திகழும்.
சிராஜூல்மில்லத் அவர்களுடன் மாணவ பருவத்தில் பண்படுத்தப்பட்டு முஸ்லிம்லீக்கில் சிறப்பாக பணியாற்றும் சிறப்பானவர்.
மற்றவர்களுக்கு நன்மை செய்யும் வேண்டும் பிறரின் கஷ்டங்களில் பங்கெடுக்க வேண்டும் என்ற பறந்த மனப்பக்குவம், சிராஜூல்மில்லத் அவர்கள் காட்டிய வழியில் இன்று தனது சொந்த நிலையில் இறையருள்இல்லத்தை (அரங்கத்தை)  அர்பணித்துள்ளார். அதில் சிராஜூல்மில்லத் மகனார் அப்துல்வகாப் அவர்களை கலந்து கொண்டு திறக்க வைத்தது முஸ்லிம்லீக் காட்டிய அறநெறி வழிகளாகும் என்றார்கள்.

எம்,எல்,ஏ ,அபூபக்கர் அவர்கள் பேசும் போது மறைந்த தலைவர்கள் ரிபாய் சாகிப் நினைவுகளுடன்  பேருந்து நிலைய திறந்துள்ளேன்.  சிராஜுல்மில்லத் பெயரில் இங்க மாற்றுத்திறனாளிகளுக்காக அரங்கை தந்துள்ளார். மூன்றாவது என்னையும் குறிப்பிட்டு கனவு திட்டங்களை நிறைவேற்றுவேன் என்றார்  உங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்  தகுதிமிக்கவர் மக்களின் பணியாற்றலில் திறமையானவர் என புகழாரம் சூட்டிய பேராசிரியர் ,இந்த அமர் சேவா சங்கத்திற்கு அனைவரும் உதவி செய்யுங்கள் என்ற வேண்டுகோளுடன் தனது ஓய்வூதியம் --25000 ம் ரூபாயை மூன்று சக்கர வாகனம் வாங்க வழங்குவதாக கூறியபோது மாற்றுத் திராணிகளின் கரவொலி  அரங்கை அதிரவைத்தது.
பிறரை தாங்கி பிடிப்பது உதவி செய்வதை தான் நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். என்பதை நினைவூட்டினார்கள்.