தமிழ்நாடு வஃக்ப் வாரிய தலைவர் பதவிக்கு
எம். அப்துல் ரஹ்மானை தேர்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி
தமிழ்நாடு வஃக்ப் வாரிய தலைவர் பதவிக்கு எம். அப்துல் ரஹ்மானை தேர்வு செய்த தளபதி முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகீதின் தெரிவித்தார்.
இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகீதின் 23.07.2021 வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : தமிழ்நாடு வஃக்ப் வாரியத் தலைவர் பொறுப்புக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத்தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மானைத் தேர்வு செய்வதற்கு எல்லா உதவிகளையும் செய்தனித் துள்ள தமிழகத்தின் முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சியிலும், பின்னர் அவர் வழி நின்று நல்லாட்சி நடத்திய கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்தவர்களுக்கு வஃக்ப் வாரியத் தலைமைப் பொறுப்பு வழங்க வேண்டும் என்று கோரி வந்துள்ளோம். இது பன்னெடுங்காலமாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்துள்ள தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கையும் ஆகும்.
தமிழகத்தின் புதிய வரலாறு படைத்து வரும் முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நீண்ட காலத்து சமுதாய கோரிக்கை இன்று நிறைவேறி இருக்கிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் தமிழக மஸ்ஜிது மஹல்லா ஜமாஅத்துகளின் சார்பிலும், தமிழக மார்க்க மேதைகளான உலமாக்கள் சார்பிலும், ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் சார்பிலும், தமிழகத்தின் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரி விப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
தங்கத் தமிழகத்தின் பொற் கால ஆட்சி என்றென்றும் நீடித்து, புதிய சகாப்தம் காண முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்து கூறுகிறோம் இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகீதின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Social Plugin