அதிராம்பட்டினம் நகர முன்னாள் முஸ்லீம் லீக் நகர தலைவர் ஹாஜி, டாக்டர் முஹம்மது சாலீஹ் அவர்கள் இல்லத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தியயூனியன் முஸ்லிம்லீக் முதன்மை துணைத்தலைவரும் தற்போதைய தமிழக வக்பு வாரிய தலைவருமான அப்துல் ரஹ்மான் 10/8/2021 அன்று மதியம் வருகை தந்தார்.
பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் கூறியதாவது:
வக்ஃப் வாரிய தலைமை பொறுப்பு எனக்கு வழங்கப்படு உள்ளது அது பதவி அல்ல, பொறுப்பு அந்த பொறுப்பை ஐந்து ஆண்டுகளில் திறம்பட செய்து முடிக்க பணிகளை துவக்கி விட்டேன்
பொய்யான தஸ்தா வேஜ் தயாரித்து வக்ப் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அடையாளம் கானப்பட்டு சொத்துக்களை மீட்டெடுக்க பணிகள் துவங்கி விட்டது இதுபோன்று அதிராம்பட்டினம் தக்வா பள்ளியின் சொத்துக்கள் கண்டறியப்பட்டு அதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்ட நிலையில் வக்பு நிலங்கள் மீட்டெடுக்ப் படும்
தமிழக முதல்வர் எப்படி ஒவ்வொரு துரைக்கும் ஐ ஏ எஸ். அதிகாரிகளை நியமித்து வேலைகள் தமிழகத்தில் இந்தியவில்
முதன்மை மானிலமாக மாற்றி காட்டிவருவதை தமிழக மக்கள் முதல்வரை பாராட்டி வருவது போன்று வக்ப் சொத்துக்களை மீட்டெடுக்க அரசின் உதவி பெற்று வக்ப் சொத்துக்களை பாதுகாப்போம் என்றார் வக்பு நில சட்ட வரையரைக்கு உட்பட்டு அவர்களை அப்புறபடுத்த அதிகாரம் இருக்கிறது என்றும் கூறினார்
அந்த வகையில் வருகின்ற காலங்களில் தக்வா பள்ளியின் அனைத்து வக்பு நிலங்களையும், மீட்கப்பட்டு நிர்வாகத்தின் கீழ் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக வக்பு வாரிய தலைவரை தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜெய்னுல் ஆபிதீன், மாவட்ட ஊடகவியலாளர் ஏ,சாகுல்ஹமீது,நகர இயூமுலீக் தலைவர் கே,கே, ஹாஜா நஜ்முதீன் ,நகர செயலாளர் வழக்கறிஞர் முனாஃப்,சேக் அப்துல்லா மாவட்ட பிரதிநிதி ஜமால் முஹம்மது, ஆபுபக்கர் ஆகியோர் வரவேற்றனர்.
பின்பு அதிராம்பட்டினம் நகர முஸ்லிம்லீக் சார்பாக நகர தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் சால்வை அணிவித்தனர் அதிராம்பட்டினம் மருத்துவர் ஹாஜா முகைதீன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
Social Plugin