Hot Posts

6/recent/ticker-posts

சென்னை ராயப் பேட்டை கிரஸன்ட் மருத்துவமனையின் 75வது பவள விழா


சென்னை ராயப் பேட்டை கிரஸன்ட் மருத்துவமனையின் 75வது  பவள விழாவையொட்டி   மருத்துவமனை வளாகத்தில் குளிர் சாதன வசதியுடன் கூடிய கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் நினைவு சிறப்பு மருத்துவ சிகிச்சைப் பிரிவு துவக்கவிழா 09-10-2021 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் கிரஸன்ட் மருத்துவமனை தலைவரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ரஃபீக்கே மில்லத் டாக்டர் சையது கலீஃபதுல்லா தலைமையில் நடைபெற்றது.  

ராயப்பேட்டை அமீருன் னிசா பேகம் பள்ளி தலைமை இமாம் கிராஅத் ஓதினார்.

விழாக்குழு தலைவர் ஆடிட்டர் எம்.ரஸாக் வரவேற்புரையாற்றினார்.  

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு  மாநில பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் இலவச கத்னா (சுன்னத் செய்தல்) பிரிவை தொடங்கிவைத்து வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவருமான எம்.அப்துர் ரஹ்மான் வாழ்த்துரை வழங்கினார்.

பாராளுமன்ற உறுப் பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான கே.நவாஸ் கனி பவள விழா கொண்டாட்ட காலண்டரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை பொதுச் செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாத்கான் காலண்டரை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர் பாத்திமா முஸப்பர், நிகழ்ச்சியை நெறிப் படுத்தினார்.  இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயலாளர் எஸ்.பி.மில்லத் முஹம்மது  இஸ்மாயில் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர் களுக்கு மருத்துவமனையின் விழாக் குழுவினர் சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

விழாக்குழு ஒருங்கிணைப் பாளர் டாக்டர் செய்யது எம்.எம்.அமீன் நன்றி கூறினார்.    

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது:

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேச்சு

இந்த சிறப்பான விழாவை ஏற்பாடு செய்த டாக்டர் சையது கலீஃபதுல்லா சாஹிப்  அவர்கள், வரும் டிசம்பர் மாதம் 12ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை வரை ஓராண்டுக்கு இந்த நிறுவனத்தின் 75ஆம் ஆண்டு பவள விழாவைக் கொண்டாடுவதற்கு அதிகாரப் பூர்வமாக முடிவெடுத் திருக்கிறார்கள். அதை முறைப்படி அறிவிக்கும் இந்த நிகழ்ச்சியில் கண்ணியத்திற் குரிய காயிதே மில்லத் அவர்களின் பெயரில் நாட்காட்டி - காலண்டர் ஒன்றை தயாரித்து வெளியிட்டு இருப்பதோடு, இந்த நல்ல நிகழ்ச்சியில் எங்களை எல்லாம் அழைத்து உரையாற்ற வைத்திருக்கிறார்கள். கண் ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பெயரால் ப்ளாக் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அதையெல்லாம் மருத்துவர் கள் சுற்றிக் காண்பித்தபோது உண்மையிலேயே எங்களுக்கு வியப்பாக இருந்தது.

சுன்னத்து கல்யாணம்

இந்த கிரஸன்ட் மருத்துவ மனையைப் பற்றிப் பொதுவாகக் கூறும் பொழுது சுன்னத்து கல்யா ணம் பண்ணும் மருத்துவ மனை என்று கூறுவார்கள். அப்படித்தான் நாங்களும் நினைத்துக் கொண்டிருந்தோம்.
அந்தக் காலத்தில் மாலி மார்கள் செய்யக்கூடிய காரியத்தை இன்று டாக்டர் செய்வதாக கருதியது எவ்வளவு தவறான சிந்தனை என்பது இன்று எங்களுக்கு இங்கு சுற்றிக் காண்பித்து உணர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த மருத்துவமனையை ஆரம்பித்தவர் டாக்டர் செய்யது நிஃமத்துல்லாஹ் அவர்கள் என்று சகோதரர் தாவூத் மியான் வரலாற்றுக் குறிப்புகளோடு எங்களுக்கு விளக்கிக் கூறினார். இந்த மருத்துவமனை துவங்கப்பட்ட காலம் முதல் இன்று வரை இதற்காக பலர் உழைத்துக் கொண்டிருந்தாலும், இந்த டாக்டர் அவர்கள்தான் இதைக் கட்டிக்காத்து, இன்றளவும் அதன் பொலிவு மாறாமல் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது வெளிப்படையான உண்மை.

இங்கே ஆற்காடு நவாப் ஸாஹிப் அவர்கள் வந்து சென் றிருக்கிறார்கள். தொழிலதிபர் பி.எஸ்.ஏ. ரஹ்மான் அவர்கள் வந்து சென்று இருக்கலாம். மெஜஸ்டிக் கரீம் காக்கா அவர்களும் வந்து சென்று இருக்கலாம். அவர்களெல்லாம் இந்த மருத்துவமனையின் தலைவர் பட்டியலில் இடம் பெற்று இருக்கலாம். நிறைய உதவி, ஒத்தாசை செய்து இருக்கலாம் என்றாலும், இதை  துவக்கிய பெருந்தகைகளின் நோக்கம் மாறாமல் அதை அப்படியே கட்டிக்காத்து இன்றளவும் நடத்திக் கொண்டிருக்கக் கூடிய தனிப்பெரும் பெருமை டாக்டர் கலீஃபதுல்லா சாஹிப் அவர்களையே சேரும்.

சகோதர சமுதாய மக்களிடத்திலும் நன்மதிப்பு

டாக்டர் அவர்களுக்கு முஸ்லிம் சமுதாயத்திலும், சகோதர சமுதாய மக்களிடத் திலும் உள்ள மதிப்பு, மகத்துவம், மாண்பு குறித்து ஒரு பெரிய வரலாற்றுப் புத்தகத்தை எழுதலாம். காலம் அதற்கு விடை சொல்லும் என்று நம்புவோம். அந்த அளவுக்கு எல்லோராலும் விரும்பப்படக் கூடியவராக இவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழ கத்தை ஆட்சி செய்த கர்மவீரர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, அதற்குப் பிறகு ஆண்ட தலைவர்கள் முதற் கொண்டு - இன்று நம் தமிழ கத்தை முதலமைச்சராக இருந்து ஆண்டு கொண்டிருக் கும் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் வரை டாக்டர் சாஹிப் அவர்களுக்கு நெருங் கிய தொடர்பு உண்டு என்பதை நான் சொல்லி தெரியும் அளவில் நீங்கள் இல்லை.
பெரும்பெரும் ஆளுமை களுடன் இந்த எழுபத்தைந்து ஆண்டு காலத்தில் நெருங் கிய தொடர்புகளை வைத் துக் கொண்டிருக்கும் டாக்டர் சாஹிப் அவர்கள், ""பவள விழாவின் நிறைவு நிகழ்ச்சியின்போது தமிழக முதல்வர் அவர்களை சிறப்பு விருந்தினராக வரவழைத்து, நிறைவுப் பேருரையை ஆற்றச் செய்வோம்!"" என்று இங்கு அறிவித்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியதும், பாராட்டுக்குரியதுமாகும். இந்த சென்னை மாநகரில் எத்தனையோ மருத்துவ மனைகள் தனிப்பெரும் சிறப்பு களோடு இயங்கிக் கொண் டிருக்கின்றன. அந்த வரிசையில் இந்த மருத்துவமனையும் தனிச் சிறப்பைப் பெற்றதாக இயங்குகிறது என்ற நல்ல தகவலை அதன் சாதனைப் பட்டியலோடு - 75ஆம் ஆண்டு பவள விழா நிறைவு விழாவின்போது முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் அறிவிக்க வேண்டும் என நான் எனது ஆசையை வெளிப்படுத்திக் கொள்கிறேன். அதற்கு இந்த மருத்துவமனையின் கட்டி டங்களை அதிகரித்து விரிவாக் கிக் கட்டுவதற்கும், இங்கு உள்ள மருத்துவ முறைகளை இன்னும் நவீனப்படுத்தி செய்வதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்வது குறித்து நீங்கள்தான் சிந்தித்து செயல்படத் துவங்க வேண்டும்.

மார்பகப் புற்றுநோய்

தமிழகத்தில் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகளவில் வருவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருப்பதாகவும் ஊட கங்கள் அண்மைக் காலமாக வலியுறுத்திக் கொண் டிருக்கின்றன. அவ்வாறு வருவதற்கு என்ன காரணம், அதைத் தடுத்து நிறுத்துவதற்கு என்ன வழி என்பன குறித்து சிந்தித்து, செயல்பாடுகளைத் துவக்குவதற்கு டாக்டர் சாஹிப் போன்றவர்கள் நடவ டிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கருதுகிறேன்.
prevention is better than cure என்று நீங்கள்தான் சொல் லிக்கொண்டு இருக்கிறீர்கள். ""நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்ப செயல்"" என்றார் வள்ளுவர். அந்த வகையில், வந்துவிட்ட இது போன்ற நோய்களை எப்படிக் களைவது என்பது குறித்தும், வருமுன் காப்போம் என்ற ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நீங்கள் அவசியம் சிந்தித்து செயல்பட வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். அதற்கு பொதுவாழ்வில் இருக்கும் நாங்களும் பயன்படுவோம் என்று நீங்கள் கருதினால், எங்கள் உதவியை எப்பொழுது கேட்டாலும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க நாங்கள் ஆயத்தமாக இருக்கின்றோம் என்று இந்த நல்ல தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா காலத்தில் மருத்துவ நலப்பணிகள்

இந்தக் கொரோனா பெருந் தொற்று காலத்தில் பல்வேறு மருத்துவ நலப்பணிகளை இந்த மருத்துவமனையிலிருந்து செய்ததாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் - தனிப்பட்ட முறையிலும், அந்தந்த ஊர் மக்கள் - அமைப்புகள் - ஜமா அத்களின் துணை யுடனும் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை நிறையவே எங்கள் தலைவர்கள் செய்து இருக்கிறார்கள். இனி ஊருக்கு வர முடியுமோ, முடியாதோ என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு உhயசவநசநன கடபைhவ என சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்து, அவர்களை வரவழைத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவர் களுக்குத் தங்குவதற்கு ஏற்பாடு களை வசதியாக செய்து கொடுத்து, தேவை யான மருத்துவ பரிசோ தனைகளையும் செய்து, தேவைப் படுவோருக்கு உரிய சிகிச்சைகளையும் வழங்கி, அவர்கள் தனிமைப் படுத்தப் பட்டு சிறப்பு இடங்களில் தங்க வைக்கப் பட்டு இருந்த காலமெல்லாம் பல நாட்களாக அவர்களுக்குத் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மூன்று வேளை உணவு வழங்கி, வீட்டில் அவர்கள் இருந்திருந்தால் எப்படிக் கவனித்து இருப்பார்களோ அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாத வகையில் கவனித்து, அவர்களை அவர்களது வசிப்பிடத்திற்கு அனுப்பி வைக்கும் அற்புதமான பணியை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர்கள் செய்திருக் கிறார்கள். அப்படி செய்தவர்கள் தான் இங்கே இதோ மேடையை அலங்கரித்துக் கொண்டிருக் கிறார்கள். இவர்களின் மகத் தான சேவைக்காக அரசுத் துறைகள் சார்பிலும், மருத்துவ மனைகள் சார்பிலும், பொதுநல அமைப்புகள் சார்பி லும், உலகளாவிய ஆர்வ லர்கள் சார்பிலும் நிறையவே இவர்கள் பாராட்டப்  பட்டிருக் கிறார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீகை உருவாக்கிய பிதாமகன் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பெயரால் ஒரு ப்ளாக்கையே துவக்கி, இங்கே விழா நடத்திக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், அவர்கள் காட்டிய வழியில் பிசகாமல் நின்று செயலாற்றிக் கொண்டிருப் பவர்கள் இவர்கள் என்பதை நினைவூட்டுவது பொருத்தம் என்ற காரணத்தால்தான் இப்பொழுது இதை நான் இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன்.

டாக்டர் கலீஃபதுல்லா சாஹிப்

தனிப்பட்ட முறையில் பல மருத்துவ சேவைகளை செய்து வந்தாலும், எங்களோடு இணைந்து இது போன்ற காரியங்களில் தோளோடு தோள் நின்று செயல்பட்டு வருபவர்தான் டாக்டர் கலிஃபுல்லாஹ் சாஹிப் அவர்கள். சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் அவர்கள் காலத்தில் - அவர்களோடு டாக்டர் சாஹிப் அவர்களுக்கு இருந்த நெருங்கிய தொடர்பை, நல்ல கருத்துப் பரிமாற்றத்தை எல்லாம் சிராஜுல் மில்லத் அவர்களோடு எப்போதும் ஒன்றாகவே இணைந்து இருந்து கொண்டிருந்த நாங்கள் நன்றாக அறிவோம். எங்களுக்கு நன்றாக நினைவிருக்கிறது... 1982ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாபெரும் மாநாட்டை சென்னை பெரியார் திடலில் வெகு விமரிசையாக நடத்திய பெருமை டாக்டர் செய்யது கலீஃபதுல்லா சாஹிப் அவர்களைச் சாரும். இப்போது யார் வேண்டுமானாலும் மாநாட்டை நடத்தி விடலாம். ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கு மிகப் பெரிய சோதனைக் காலகட்டமாக இருந்த - அதன் பணிகளில் பெரும் தொய்வு கண்டிருந்த வேளையில் இந்த நாடே பரபரப்பாக பேசும் வகையில் மாநாட்டை அந்தக் காலத்தில் நடத்திக் காட்டியது ஒரு மிகப்பெரிய சாதனை என்று தான் நாம் சொல்ல வேண்டும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

உள்ளுக்குள் ஆயிரம் சோதனைகள், வருத்தங்கள், வலிகள் இருந்தாலும், அந்த மாநாட்டிற்கு வந்து சென்ற தேசிய தலைவர்கள் எல்லாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு முழுவதும் பரவி வியாபித்து வேரூன்றி இருப்பதாகச் சொல்லிச் சென்றது உண்மையில் எங்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ஆக இந்த முஸ்லிம் லீக் எல்லாக் காலமும் செழிப்போடு தழைத்தோங்க வேண்டும் என்ற மகத்தான சிந்தனை இந்த டாக்டர் சாஹிப் அவர்களின் ஆழ் மனதில் வேரூன்றி இருந்த காரணத்தால் மட்டுமே அவர்களால் இந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முடிந்தது. இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கவும் முடிகிறது.
டாக்டர் சாஹிப் அவர்களை ஒரு மருத்துவராக மட்டும் பலர் பார்த்தாலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அங்கத்தினர்களாகிய எங்களுக்கு இவர் ஒரு பண்பட்ட பெரும் தலைவரா கத்தான் காட்சியளிக்கிறார். அவரது அறிவுரையின் படி நடந்தால் நமக்கு நிச்சயம் வெற்றி உண்டு என்பதை தன் வாழ்நாளெல்லாம் உணர்த்திக் கொண்டிருக்கிறார்.

அப்படிப்பட்ட இவர்கள் நடத்திக்கொண்டிருக்கும் இந்த மருத்துவமனை - கட்டிடத்தாலும், மருத்துவ முறைகளாலும் இன்னும் மேம்பட்டு - அரிய பல சாதனை களைப் புரிய வேண்டும், அதற்காக என்னென்ன செயல்திட்டங்களை எல்லாம் தீட்டி நடைமுறைப் படுத்த முடியுமோ அவை அனைத்தையும் செய்வதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாங்கள் எல்லா வகையிலும் ஆதரவளிப்போம், ஒத்துழைப்போம், உதவி செய்வோம், ஓரணியில் நின்று களப்பணி ஆற்றுவோம் என்றும், உங்கள் கட்டளையை எதிர்பார்த்து எங்கள் கடமையை நாங்கள் செய்ய ஆயத்தமாக இருக்கிறோம் என்றும் இந்த நல்ல நேரத்தில் உற்சாகத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே இருக்கக் கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிர்வாகிகள் ஒவ்வொருவருமே அவரவர் துறைகளில் நின்று அரும்பணி ஆற்றக் கூடியவர்களாக இருக்கிறார்கள். தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் அப்துர் ரஹ்மான் இங்கே இருக்கிறார். அவரது பொறுப்பு சார்ந்து மருத்துவத் துறையில் சமுதாயத்திற்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யும் நிலையில் அவர் இருக்கிறார். அதுபோல, நம் தமிழகத்தில் எத்தனையோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் அனைவராலும் உளமாரப் பாராட்டப்படும் அளவில் - சாரிட்டபிள் அறக் கட்டளையை வைத்துக் கொண்டு, ஆண்டுதோறும் சுமார் 4 கோடி ரூபாய் வரை தமது வணிகத்தில் இருந்து தனியாக தொகையை எடுத்து, உயர்கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள், சகோதர சமயங்களைச் சேர்ந்த மாண வர்கள் என அனைத்து சமயங் களைச் சேர்ந்த ஏராளமான மாணாக்கருக்கு தாராள மனதோடு கல்வி உதவித் தொகைகளைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் அன்புச் சகோதரர் நவாஸ் கனீ இங்கே இருக்கிறார். அவர் தன் துறை சார்ந்து என்னென்ன ஒத்துழைப்புகளைச் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்வார்.

அதுபோல, தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் சொன்னது போன்று - ""நீங்கள் சட்டமன்றத்திற்கு ஒருவரை அனுப்பினாலும் ஒரு சிங்கத்தை அல்லவா அனுப்பி இருக்கிறீர்கள்?"" என்று கூறிய அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரரான அன்புத் தம்பி முஹம்மத் அபூபக்கர் இங்கே இருக்கிறார். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பெயரர் தாவூத் மியான் அவர்கள் குறித்து நான் சொல்லித் தெரியும் நிலையில் நீங்கள் இல்லை. பெரும் பெரும் ஆளுமைகளோடு நெருங்கிய - நீண்ட நாள் தொடர்பு கொண்டவர் அவர். ஆயிரம் சிறப்புகளை அவர் கொண்டிருந்தாலும் காயிதே மில்லத் அவர்களின் பெயரர் என்பதை விட மிகப் பெரிய சிறப்பு வேறு இருக்க முடியாது. ஆக இப்படிப்பட்ட தனிச் சிறப்புகளைக் கொண்ட சகோதரர்கள் எல்லாம் - நீங்கள் தீட்டும் செயல்திட்டத்திற்கு எந்தெந்த வகைகளில் உதவ முடியுமோ அப்படி எல்லாம் உதவுவார்கள் என்று நான் கூறிக் கொள்கிறேன்.

இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் 1 இலட்சம் ரூபாய் ஊக்கத் தொகை

சிறப்பிற்குரிய ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்து, அதில் எங்களையெல்லாம் வரவழைத்து உரையாற்றச. செய்தமைக்காக டாக்டர் சாஹிப் அவர்கள் உள்ளிட்ட ஏற்பாட்டாளர்கள் அனை வருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை நாங்கள் தெரி வித்துக் கொள்கிறோம். இந்த மருத்துவமனையில் பணி யாற்றிக் கொண்டு இருக்கக் கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த விழாவிலேயே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையை வழங்குகிறோம். உங்கள் பணி மென்மேலும் சிறந்து, அதன்மூலம் இந்த மருத்துவமனை புகழ் பெற்று சிறந்தோங்க நாங்கள் வாழ்த்திப் பிரார்த்திக்கிறோம்.

மருத்துவர்கள் - செவிலியர்கள்

இங்குள்ள மருத்துவர்களை யும், செவிலியர்களையும் நேரில் சந்தித்து அளவளாவும் அற்புதமான ஒரு வாய்ப்பை இன்று நாங்கள் பெற் றோம். அவர்களுடன் உரையாடு கையில் எங்களது கடந்த கால நினைவுகள் எல்லாம் மலரும் நினைவுகளாக வந்து சென்றன. நான் மேலே சொன்ன படி இந்த மருத்துவமனையின் வளர்ச்சிக்காக, இதன் மேன்மைக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஒத்துழைக்கவிருக்கும் இந்தப் பெருமக்களுடன் இணைந்து அடியேனும் என்னாலான ஒத்துழைப்புகளையும், உதவிகளையும் செய்வேன். அதற்குரிய தகுதியையும், உடல் நலத்தையும் இறைவன் எனக்கு நிச்சயம் வழங்குவான் என்ற நம்பிக்கை எனக்கு என்றென்றும் உண்டு.
உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வாழ்த்தி, துஆ செய்து எனது உரையை முடிக்கிறேன், நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.