Hot Posts

6/recent/ticker-posts

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள்அனைவரையும் முஸ்லிம்கள் என்ற ஒரே அடையாளத்தின்கீழ்தான் கொண்டு வரவேண்டும்இந்தியாவில் முஸ்லிம்களுக்குள் எவ்வித பேதமும் இல்லை என்பதை உலகுக்கு பறைசாற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்மதுரையில் நடைபெற்ற சமுதாய ஒற்றுமை பெருவிழாவில் தேசிய தலைவர் பேராசிரியர் கே. காதர் மொகிதீன் பேச்சு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள்
அனைவரையும் முஸ்லிம்கள் என்ற ஒரே 

அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன்  (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) 16 மாவட்ட நிர்வாகிகள்,  400 பேர் கட்சி யிலிருந்து விலகி இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணையும் நிகழ்ச்சி 10-10-2021 ஞாயிறுக்கிழமை மதுரை, கே.கே. நகர், லேக் வீவ் சாலை, நீதி பகவதி பவன், வீ. ஆர். கிருஷ்ணஐயர் கம்யூனிட்டி ஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.  
அவர் பேசியதாவது:

மனவள நாள்

சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் மிகச் சிறப்பான வரலாறு ஒன்று இங்கே உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று உலக மனவள நாள் Mental Welfare Day என்று உலகம் சொல்கிறது. உள்ளங்களை வளப்படுத்தி மேம்படுத்தும் இந்த நன்னாளில், சமுதாய மக்களின் உள்ளங்களைப் பிணைத்து வளப்படுத்தும் நோக்கில் இந்த நல்ல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிற அவ்தா காதர் பாட்சா, அவருடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிற ஹிதாயத்துல்லாஹ் ஷரீஃப், ஆஷிக் ஹுஸைன், பீர் ஜீ, முஹம்மத் இஸ்மாஈல் உள்ளிட்ட நண்பர்கள் அனைவரையும் துவக்கமாக நான் வரவேற்று நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன்
மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற பெயரில் இயங்கி வரும் அமைப்பில் உள்ள 17 மாவட்டங்களின் நிர்வாகிகளை எல்லாம் ஒன்றிணைத்து அரும்பாடு பட்டு அனைவரையும் பச்சிளம் பிறைக் கொடியின் கீழ் கொண்டுவந்து, அதை அறிமுகப் படுத்தும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார் அவ்தா காதர் பாட்ஷா அவர்கள். அவரோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில முதன்மை நிர்வாகிகள், மாவட்ட - மாநகர நிர்வாகிகள் எல்லோரும் ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, கலந்து கொண்டும் இருக்கிறீர்கள். இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள் எல்லோரும் நிறைய கருத்துக்களை உங்கள் உரைகளில் தெரிவித்திருக்கிறீர்கள். 

 
மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் 17 மாவட்டங்களது தலைவர்களை ஒன்றிணைத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இப்பொழுது இணைத்து இருக்கிறீர்கள். இந்த ஒவ்வொரு தலைவரின் பின்னாலும் ஏராள மானவர்கள் இருப்பார்கள். அவர்களையும் தாய்ச்சபையில் சங்கமிக்கச் செய்வது உங்கள் கடமை. உங்களை வாருங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஆதரவு தாருங்கள் என்று நாங்கள் அழைப்பதை - ஏதோ புதியதொரு கட்சிக்கு அழைப்பதாக நீங்கள் கருதிவிடக் கூடாது. இது நம் தாய் இயக்கம். நம் சமுதாயத்தின் இயக்கம். இன்று இருக்கும் யாரோ ஒரு சிலரோ பலரோ ஆரம்பித்த இயக்கம் அல்ல. நம் நாட்டின் விடுதலைக்குப் பிறகு சிறுபான்மையினராக இருக்கும் நம் சமுதாய மக்களை யாரும் தனிமைப்படுத்தி விடாமல் பாதுகாப்பதற்காக உருவாக்கி, வழிநடத்தப்பட்டு, இன்று நம் கைகளில் சேர்க்கப்பட்டிருக்கும் ஓர் அமானிதம்.
 
சமுதாயப்பணிகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கு உங்களை உளமார நாங்கள் அழைப்பது ""தொண்டு செய்ய வாருங்கள்!"" என்று அல்ல. ""நாங்கள் மேலே இருந்து உத்தரவிடுவோம்... கீழே இருந்து நீங்கள் செய்து கொண்டிருங்கள்!"" என்று சொல்வதற்காகவும் அல்ல. மாறாக, """"சமுதாயத்திற்குத் தேவையான பல பணிகளைச் செய்வதற்கு தலைமை ஏற்க வாருங்கள்!"" என்றுதான் உங்களை நாங்கள் அழைக் கிறோம். இந்தச் சமுதாயத்திற்கு உங்களின் தேவை நிச்சயமாக இருக்கிறது. அதற்கு உங்களை நீங்கள் இப்பொழுதே ஆயத்தப் படுத்திக் கொள்ளுங்கள்.
 
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் - இயக்கங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு மாறுபட்ட - தனித்துவமிக்க இயக்கம். இந்திய தேர்தல் ஆணையத்தின் கணக்குப்படி இந்தியாவில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றன. அவற்றுள் முஸ்லிம் கட்சிகளும் அடக்கம். உலகில் 193 நாடுகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை சொல்கிறது. அவற்றுள் 57 முஸ்லிம் நாடுகள் என முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. 72 நாடுகளில் முஸ்லிம்கள் சிறுபான்மை யினராக வாழ்வதாகக் கூறப்படுகிறது. ஆக, உலகிலுள்ள முஸ்லிம்கள் வசிக்கும் எந்த நாடாக இருந்தாலும் அங்கே முஸ்லிம் லீக் என்ற பெயரில் ஒரு கட்சி கூட கிடையாது. முஸ்லிம் லீக் என்ற பெயர் தாங்கிய ஒரே கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டும்தான். முஸ்லிம் என்ற பெயரில் இந்தக் கட்சியை உருவாக்கியவர்கள் யாரோ சாதாரணமானவர்கள் அல்ல. மாறாக ஆன்மிகத் தலைவர்கள்.
 
ஐந்து முனைக்கொண்ட நட்சத்திரங்கள்

இந்தக் கட்சியின் பச்சிளம் பிறைக் கொடியில் ஐந்து முனை கொண்ட நட்சத்திரங்கள் இருப்பதையும், அவை தாங்கியிருக்கும் நோக்கங்களையும் விளக்கி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் தம்பி அபூபக்கர் பேசினார். மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் சொன்னது போல, இந்த கட்சியின் எண்ணமும் வண்ணமும் மாறாமல் துவக்கம் முதல் இன்றுவரை தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. இன்ஷா அல்லாஹ் இது உலக முடிவு நாள் வரை இருக்கும். இந்தப் பிறைக்கொடியில் ஐந்து முனை நட்சத்திரம் இல்லாமல் 6 முனை நட்சத்திரம் இருந்தால் அது இஸ்லாமை நினைவுபடுத்தாது; மாறாக, வேறொரு மதத்தை நினைவுபடுத்தும். உலகத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு இந்திய முஸ்லிம்களின் பாதுகாப்புக் கட்டமைப்பைத் தெளிவாக எடுத்துரைக்கும் வகையிலேயே இந்தக் கட்சியை, இதன் கொடியை இங்குள்ள மார்க்க அறிஞர்கள் உருவாக்கி நம்மிடம் தந்து சென்றிருக்கிறார்கள்.
நமது இந்திய நாட்டில் 132 கோடி மக்கள் இன்று இருப்பதாக கணக்கு சொல்கிறது. மராட்டியத்தில் இருந்து வெளியாகும் சிவசேனாவின் சாம்னா என்ற பத்திரிக்கையில் - இந்தியாவில் 22 கோடி முஸ்லிம்கள் இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன் எழுதி இருக்கிறார்கள். இந்தக் 22 கோடி முஸ்லிம்களும் முஸ்லிம் பெயருடன்தான் இருக்கிறார்கள் அவ்வப்போது அவர்களது பெயருடன் குடும்பப் பெயர், பட்டப் பெயர், தொழில் பெயர் இணைந்து கொண்டாலும் நிரந்தரமாக அவர்கள் அழைக்கப்படுவது என்னவோ முஸ்லிம் பெயருடன்தான்.
 
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு

நம் நாட்டில் ஜாதி வாரி யாக மக்கள் தொகைக் கணக் கெடுப்பு நடத்து வதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. ""நீங்கள் மற்றவர்களுக்கு எப்படி வேண்டு மானாலும் கணக்கெடுப்பை நடத்தி கொள்ளுங்கள்... ஆனால், முஸ்லிம்கள் பின்பற்றும் இந்த இஸ்லாம் மார்க்கத்தில் ஜாதி என்பதே கிடையாது. முஸ்லிம்கள் அனைவரும் முஸ்லிம் என்ற ஒரே பெயரில் உள்ளவர்கள்தான். எனவே, முஸ்லிம்களைக் கணக் கெடுக்கும் போது முஸ்லிம்கள் என்ற ஒரே ஜாதியாகக் கணக்கெடுக்க வேண்டுமே தவிர - இந்துக்களைக் கணக்கெடுப்பது போல முஸ்லிம்களுக்கு உள்ளேயே ஜாதியைக் கொண்டு வந்து நுழைத்து விடாதீர்கள்!"" என்று நாம் தெளிவாகவே வலியுறுத்தி இருக்கிறோம்.
 
கல்கத்தாவில் உள்ள, The Anthropological Survey of India   என்கிற நிறுவனம் இந்தியாவில் உள்ள அனைத்து அமைப்புகளையும் புள்ளி விபரத்துடன் எடுத்து, 15 தொகுதிகளாக - வால்யூம்களாக அதை வெளியிட்டு இருக்கிறார்கள். அவற்றுக்கான கட்டணம் பல ஆயிரம் ரூபாய். எப்படியாவது அதை வாங்கி விட வேண்டுமென கடந்த ஒரு வாரமாக நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அதில் சொல்லப்படுவதன் படி - இந்தியாவில் குடிமக் களிடையே 4 ஆயிரத்து 698 வகுப்புகள் இருக்கின்றன. இவர்களில் இருந்துதான் ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத் தப்பட உள்ளது. அப்படி முஸ்லிம்களைக் கணக் கெடுக் கும்போது 22 கோடி பேரையும் முஸ்லிம்கள் என்ற ஒரே அடையாளத்தின் கீழ்தான் கணக்கு எடுக்க வேண்டுமே தவிர முஸ்லிம்களுக்குள் ஜாதி என்று புணைந்து, அதன் கீழ் கணக்கெடுப்பு நடத்தக் கூடாது என நாம் வலியுறுத்தி இருக்கிறோம்.
முஸ்லிம் நாடுகள்
உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளில் கூட முஸ்லிம் என்ற பெயரில் அமைப்பு எதுவும் இல்லை. இந்தியாவில் மட்டும்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று முஸ்லிம் பெயரிலேயே அமைப்பு இருக்கிறது. உலகில் பல முஸ்லிம் நாடுகளில் ஷியா முஸ்லிம்களுக்கும் - சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்களுக்கும் இடையில் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆப் கானிஸ்தான் நாட்டில் ஹஜாரா என்ற ஷியா முஸ்லிம் களின் பள்ளிவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை குண்டு வைத்து 100 பேருக்கு மேல் கொன்றிருக்கிறார்கள். யமன் நாட்டில் உள்ள ஷியாக்கள் ஈரான் நாட்டில் உள்ள ஷியா தலைவர்களால் தூண் டப்பட்டு, சவூதி அரபிய விமான நிலையத்தில் குண்டு வெடிப்புத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். இது ஏதோ ஓரிரு நாடுகளில் நடைபெறும் சண்டை சச்சரவு அல்ல. மாறாக முஸ்லிம் நாடுகள் என்று சொல்லிக் கொண்டே உலக நாடுகளில் முஸ்லிம்களுக்குள் பலவிதமான சண்டை - சச்சரவுகள், தாக்குதல்கள், உயிர்ப்பலிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் இந்தியாவில் இந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பேரியக்கத்தை உருவாக்கி யவர்கள் முஸ்லிம்களில் உள்ள எல்லா கருத்தியல்களையும் சார்ந்தவர்கள். இந்தக் கட்சியை உருவாக்கியபோது தலைமை தாங்கியவர் இஸ்மாஈலீ ஹூஜா என்ற ஷியா சமூகத்தைச் சேர்ந்த ஆகா கான் அவர்கள்தான். முஸ்லிம் லீகின் அன்றைய தலைவராக இருந்து வழிநடத்திய முஹம்மத் அலீ ஜின்னா அவர்களும் ஷியாவில் உள்ள ஹோஜா முஸ்லிம் வகுப்பைச் சார்ந்தவர்தான். ஆக, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர்கள் பலர் ஷியா வகுப்பைச் சார்ந்தவர் களாகவோ, சுன்னத்துவல் ஜமாஅத் வகுப்பைச் சார்ந்தவர் களாகவோதான் இருப்பார்கள். அதுதான் இதன் வரலாறு. ஷியாக்களும், சன்னிகளும் உலக அளவில் பல்வேறு நாடுகளில் மிகப்பெரிய சண்டை - சச்சரவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையில்தான் - """"இந்தியாவில் முஸ்லிம்கள் நாங்கள் அனைவரும் ஒன்றே! எங்களுக்குள் பேதம் எதுவும் இல்லை"" என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற மாபெரும் கட்டமைப்பின் மூலமாக உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறோம்.
 
இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இந்த நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஷியா முஸ்லிம்கள், சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்கள் என அனைவருமே உறுப்பி னர்களாக இணைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை நாம் பிரிவால் வேறுபடுத்திப் பார்ப்பது இல்லை. அது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கொள்கையிலும் இல்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில முதன்மை துணைத் தலைவர் - வக்ஃப் வாரிய தலைவர் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்கள் சொன்னது போல - இந்தக் கட்சியின் கொள்கை என முஸ்லிம் லீகின் சட்டதிட்டத்தில் சொல்லப்பட்டிருப்பது -Indian National Unity- தான் கூடி
 Preserve, protect and defend the national unity of our country - இந்த நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாத்து, பராமரித்து, தற்காத்துக் கொள்வதற்குத்தான் இந்த கட்சி இருக்கிறது. இது முதல் நோக்கம்.

சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு

இரண்டாவது, நான் ஏற்கனவே சொன்னது போல, நம் நாட்டில் 4,698 வகுப்புகள் உள்ளன. இவர்களுக்கு இடையே ஒரு நல்ல இணக்கம் எப்பொழுதும் பேணப்பட வேண்டும். இந்த நல்லிணக்கத்தைச் சிதைக்கும் வகையில் முடிச்சுப் போட்டு விட்டு சண்டை ஏற்படுத்துவதை இந்த நாட்டுக் குடிமக்களாக நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதற்காகத்தான் கட்சியின் இரண்டாவது கொள்கையாக Communal Amity - சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு என்று வைத்திருக்கிறோம்.
இந்த நாட்டை உருவாக்கியவர்கள் இதை சமயசார்பற்ற நாடாகத்தான் உருவாக்கிக் கட்டமைத்துத் தந்திருக்கிறார்கள். ஆனால் இன்று இந்த நாட்டை ஆண்டு கொண்டிருப்பவர்கள் ஒரு சமயம் சார்ந்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்திய நாடு என்ற இந்த நாட்டை இந்து நாடு என்று மாற்றத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை இந்தியத்துவம் என்று பேசப்பட்டவை இப்பொழுது இந்துத்துவம் என்று பேசப்பட்டுக் கொண் டிருக்கிறது. பேரினவாதம் - பெரும்பான்மையைக் காட்டி சிறுபான்மையினரை முடக்கும் கீழ்த்தரமான போக்கில் ஒன்றிய அரசு இப்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த மதுரை மண் காந்தி வந்து சென்ற மண். சமத்துவத்தை நிலைநாட்டத் துடித்தவர்கள் வாழ்ந்து வழிகாட்டி மறைந்த மண். மதுரை முஹம்மத் மவ்லானா அவர்கள் மகாத்மா காந்தி அவர்களின் கரம்பிடித்து இந்த மதுரை நகரில் வலம் வந்த வரலாற்றுப் பதிவுகள் உண்டு. அப்பேர்ப்பட்ட மகத்துவமிக்க இந்த மண்ணில் நடைபெறும் இவ்விழாவில் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது - மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு 1 டாக்டர் அம்பேத்கர், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் உள்ளிட்ட இந்நாட்டின் பெரும் பெரும் தலைவர்கள் எல்லாம் - இதை சமய சார்பற்ற நாடாகவே வழி நடத்தினார்கள். அப்பேர்பட்ட இந்த நாட்டை ஒரு சமயம் சார்ந்த நாடாக மாற்றிட ஒன்றிய அரசை ஆண்டு கொண்டிருக்கும் மதவெறிக் கும்பல் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறது. இனி வருங்காலத்திலும் இப்படித்தான் இருக்கும் என்று வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டும் இருக்கிறார்கள்.
 
ஒற்றுமை பாதுகாக்கப் படவேண்டும்

இந்த அத்துமீறிய போக்கை வலிமையாக எதிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என இந்த நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் இப்பொழுது தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தருணத்தில்தான் - இந்த நாட்டின் ஒற்றுமை கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும்... இந்த நாட்டில் உள்ள 4 ஆயிரத்து 698 வகுப்பினருக்கு இடையே மோதல்கள் இல்லாத - பிரிக்க முடியாத சமூக நல்லிணக்கம் இருக்க வேண்டும்... அது தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்... இந்த 4 ஆயிரத்து 698 வகுப்பினருள் முஸ்லிம்கள் மட்டும் 22 கோடி பேர் இந்த நாட்டில் இருக்கிறார்கள். இந்த நாட்டிலுள்ள மொத்த வகுப்பினருள் இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வேறு யாருமில்லை... ஒவ்வொரு வகுப்பினருக்கும் என கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கம் ஆகியன தொன்று தொட்டு இருந்து வருகிறது. அந்தக் கலாச்சார தனித்தன்மைகள் பாதுகாக்கப்பட வேண்டும்... இந்த நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள், சீக்கியர்களின் கலாச்சாரத் தனித்தன்மைகள் எப்படிப் பாதுகாக்கப்பட்டு வருகிறதோ அதே போல முஸ்லிம்களின் கலாச்சாரத் தனித் தன்மையும் பாதுகாக் கப்பட வேண்டும்... என இந்த மூன்றையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கை முழக்கமாகக் கொண்டு வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நாட்டில் இந்தப் பேரியக்கம் இயங்கும் காலமெல்லாம் இதைத் தொடர்ந்து வலியுறுத்தும். இதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைக்கும் எதிராகக் களம் காணும்.
இந்த மூன்று கொள்கை முழக்கங்களை இந்த நாட்டில் செயல்படுத்தவும், அதன் வழியில் முஸ்லிம் சமுதாயத்தை வழி நடத்தவும் உறுதிபூண்டு இயங்கிக் கொண்டிருப்பதுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். அந்த அடிப்படையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எங்கு கிளைபரப்பினாலும், புதிதாகத் துவக்கப்பட்டாலும் - இதன் நோக்கம் இந்த மூன்று முழக்கங்களை முன்னிறுத்திய தாகத்தான் இருக்கிறது.

மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் தலைவர் அஸதுத்தீன் உவைஸி

மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் தலைவர் அஸதுத்தீன் உவைஸி அவர்கள் எனக்கு நல்ல நண்பர்தான். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி கலந்து ஆலோ சிக்கும் இடமாக அவரது வீடுதான் இருந்தது. அத் தருணங்களில் உணவு ஏற்பாடு களையும் அவர் தான் செய்வார். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராக இருந்த இ. அஹமது சாஹிப் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் - இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராகவும் இருந்த காலத்தில் 37 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாலோசிக்க வேண்டிய ஒரு சூழலின்போது அந்தக் கூட்டத்தை அஸதுத்தீன் உவைஸிதான் கூட்டினார். அப்போது அலுவல் காரணமாக இ. அஹமது சாஹிப் அவர்கள் வெளிநாடு சென்றிருந்தார். எனவே கூட்டத்திற்குத் தலைமை ஏற்க என்னை அவர் கேட்டுக் கொண்டார். """"நான் எப்படி...?"" என்று தயங்கியபோது, "" யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் நீங்கள்தான் இருக் கிறீர்கள்... எனவே நீங்கள்தான் தலைமை தாங்க வேண்டும்!"" என்றார். அந்த அளவுக்கு நெருக்கமான உறவுதான்.
இந்தியாவில் சிறுபான்மை யினர் விவகார அமைச்சகம் Ministry of Minority Affairs வேண்டும் என்று கோரிக்கை அந்தக் கூட்டத்தில்தான் எழுப்பப்பட்டது. அதன் காரணமாகத்தான் இன்றளவும் அந்த அமைச்சகம் நம் நாட்டில் இருந்து கொண்டிருக்கிறது. அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம் இந்தக் கோரிக்கையை நாங்கள் முன்வைத்தபோது துவக்கத்தில் மறுத்தவர் அடுத்த சந்திப்பில் ஏற்றுக் கொண்டு செயல்படுத்தினார்.
 
சூரத்துல் ஃபாத்திஹா

பிரதமரிடம் பேசுவதற்காக துவக்கத்தில் இருவரை நியமித்தோம். அவர்கள் சொல்ல வேண்டியவற்றை விட்டுவிட்டு - தங்களை முன்னிலைப்படுத்தி ஏதேதோ பேசிவிட்டு வந்துவிட்டார்கள். அதனால் அந்தக் கோரிக்கை நிறைவேறாமல் போய்விட்டது. பிறகு நாங்கள் மீண்டும் கலந்து ஆலோசித்தோம். அப்போது உவைஸி அவர்களிடம் நான், ""தமிழகத்தில் எங்களுக்கு உலமாக்கள் கற்றுத்தந்து இருப்பது - கோரிக்கைகளை முன்வைக்கும் போது சூரத்துல் ஃபாத்திஹாவின் சூத்திரத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான்"" என்றேன். """"What do you mean by that? - நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?"" என்று அஸதுத்தீன் உவைஸி கேட்டார். ""சூரத்துல் ஃபாத்திஹாவில் துவக்கமாக அல்லாஹ்வைப் புகழ்கிறோம்... அடுத்து அவனுக்குக் கட்டுப் படுவதாக உறுதி கூறுகிறோம்... பிறகுதான் நமது கோரிக்கையை முன்வைக்கிறோம்... இதையே பின்பற்றி பிரதமரிடம் நமது கோரிக்கை வைத்தோமானால் நிச்சயம் நிறைவேறும்"" என்றேன். """"இதை முதலிலேயே சொல்லி இருக்கக் கூடாதா?"" என்று அவர் கேட்டார். பிறகு மீண்டும் 37 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூடினோம். சூரத்துல் ஃபாத்திஹாவின் சூத்திரத்தைப் பின்பற்றி பிரதமரை அணுகினோம்... கோரிக்கை நிறைவேறியது... சிறுபான்மையினருக்கான அமைச்சகம் வந்தது... இன்று வரை இருக்கிறது. அது ஒரு தனி வரலாறு.

அதுபோல, முஸ்லிம் சமுதாய மாணவர்களுக்கான நலத் திட்டங்களுக்காக 370 பக்க அறிக்கை ஒன்றை நாங்கள் ஆயத்தம் செய்தோம். அதை எழுதித் தொகுத்தவர் அஸதுத்தீன் உவைஸிதான். அந்தளவுக்கு எங்களுக்குள் நெருக்கம் இருக்கிறது. அவர் ஒரு கட்சி வைத்திருக்கிறார். அது ஹைதராபாத்தில் ரஜாக்கர் இயக்கத்தில் இருந்து உருவான கட்சி. அதில் இருந்து மருவி வந்ததுதான் மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் அதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. அந்தக் கட்சியை நடத்துவதற்காக 12 ஆண்டுகளுக்கு முன்பே 34 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக எனக்கு சொல்லப்பட்டது. இன்று அது இன்னும் பல்கிப் பெருகி இருக்கும். ஆகவே அவர்களுக்கு பணப் பிரச்சினை என்பது இல்லை.

கட்சியைத் துவங்கிய வேகத்திலேயே அவர் இந்தியா முழுக்க அதை விரிவுபடுத்த வில்லை. இப்போதுதான் அந்த முயற்சியைச் செய்து கொண்டிருக்கிறார். ""இந்திய முஸ்லிம்களின் மனதில் விவேகமற்ற - வேகமான போக்கை உங்கள் வழிகாட்டல் ஏற்படுத்துகிறது... அது சரியானது அல்ல... அதனால் நன்மை விளையாது!"" என்று அவரிடமே நாங்கள் கூறியிருக்கிறோம். இந்த நாட்டில் பிற மதங்களை விமர்சித்துப் பேசுவதாலோ, தூண்டு வதாலோ எந்தப் பயனும் ஏற்பட்டு விடப் போவதில்லை என்பதை விட - எதிர்மறையான விளைவுகளை அது ஏற்படுத்திவிடும் என்பது நமக்குப் பல்லாண்டு கால பட்டறிவு. இந்த நாட்டிலுள்ள எல்லா தரப்பு மக்களையும் அரவணைத்து, அன்பைப் பரப்பி நமக்குத் தேவையான வற்றை நிறைவேற்றிக் கொள் வதுதான் சரியான அணுகு முறை. அது மட்டும்தான் தேவையான பயன்களைத் தரும் என்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அன்று தொட்டு இன்று வரை உள்ள நிலைபாடு. அதைத்தொடர்ந்து செய்யவும், அதற்கு எதிராக மேற்கொள்ளப் படும் முயற்சிகள், நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும் - அதைச் செய் வோர் யாராக இருந்தாலும் அவற்றை - அவர்களை எதிர்த்துக் களமாடவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரும்பாடுபட்டுக் கொண் டிருக்கிறது.

பாபரி மஸ்ஜித்

1992ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. அதன் பிறகு முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் தொடர் கலவரங்கள் நடத்தப்பட்டு, பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப் பட்டனர். அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எங்கெல்லாம் வியாபித்திருந்ததோ அங்கு மட்டும் கலவரங்கள் நடைபெறவில்லை. அதற்கான வாசல் திறக்கப்படவில்லை.
குடியுரிமை திருத்தச் சட்டம்
இப்போது டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட் டத்தை எதிர்த்து போராட் டங்கள் நடை பெற்றுக் கொண் டிருக்கிறன. இதிலும் திட்டமிட்டு கலவரம் நடத் தப்பட்டது. முஸ்லிம்களும், சகோதர சமயங்களைச் சேர்ந்த மக்களும் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான முஸ்லிம்கள் உள்ளிட்ட பலரது வணிகம் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் வணிகர் டயர் விற்கும் நிறுவனம் வைத்திருந்தார். அவருக்கு மட்டுமே 5 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு உதவி செய்வதற்காக நாங்கள் அணுகியபோது, 25 லட்சம் ரூபாயை மட்டும் உதவியாகப் பெற்றுக் கொண்டார். அதுபோல, கலவரத்தில் உயிரிழந் தவர்களின் குடும்பத்தார், வீடுகள் - உடமைகளை இழந்தவர்கள், வணிக நிறுவனங்களை இழந்தவர்கள், அதில் பொருளாதார இழப்பு ஏற்பட்டவர்கள் என பார்த்துப் பார்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நம்மாலான உதவிகளைச் செய்தோம்.

உத்தரப்பிரதேசம்
முஸஃப்பர் நகர்

உத்தரப்பிரதேசம் முஸஃப் பர் நகரில் நடை பெற்ற கலவரத்தால் பாதிக்கப் பட்டவர்கள் வீடிழந்தவர் களுக்கு என பெரிய இடத்தை வாங்கி, 160 வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.டி. முஹம்மத் பஷீர் அவர்களது ஒருங்கிணைப்பில் இந்தப் பணி செய்து முடிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளில் நிவாரண உதவிகள் குறிப்பிடத்தக்க அளவில் செய்து முடிக்கப் பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று
இப்பொழுது கொரோனா பெருந்தொற்று பரவல் காரண மாக ஊரடங்கு முழுமை யாகவும் - பகுதியாகவும் நடை முறையில் இருந்த - இருக்கிற நிலையில், வெளிநாடுகளில் இருந்து தாயகம் வரமுடியாமல் சிக்கித் தவித்தவர்களுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகத்தான உதவிகளைச் செய்து இருக்கிறது - செய்து கொண்டிருக்கிறது. அவர்களை வரவழைப்பதற்காக தனி விமானம் ஏற்பாடு செய்து, அவர்களுக்கு பயணச்சீட்டு ஏற்பாடுகளை செய்து கொடுத்து, ஊர் வந்த பிறகு அவர்களைத் தனிமைப் படுத்துவதற்காக முகாம்களை ஏற்பாடு செய்து, அங்கு அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் மூன்று வேளை உணவு ஏற்பாடு செய்து, மகிழ்ச்சியாக அவர்களை வசிப்பிடம் அனுப்பி வைத்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக். இந்தப் பணிகளைச் செய்ய நமது நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி பெரும் முனைப்பு காட்டியதை இங்கு நாம் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.
 
இதையெல்லாம் நாம் வெளியே விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கவில்லை. ""நீங்கள் செய்யும் நன்மைகளை வெளிப்படையாகவும் செய்யலாம்... மறைத்தும் செய்யலாம்... ஆனால் மறைத்து செய்வதால் - நீங்கள் மறைத்து செய்த பாவங்களுக்கு அது பரிகாரமாகும்..."" என்ற திருமறை குர்ஆனின் அறிவுறுத்தலே நாம் இவ்வாறு நடப்பதற்குக் காரணம். இதைத்தான் நம் தலைவர்கள் நமக்குத் தொடர்ந்து கற்றுத் தந்திருக்கிறார்கள். எனவே, இதுபோன்ற நாம் செய்யக் கூடியவற்றை எல்லாம் மக்களிடம் விளம்பரப் படுத்துவதற்காக என சிறப்பு ஏற்பாடுகள் செலவுகள் என எதையும் நாம் செய்வதில்லை; அது நமது வழமையும் இல்லை.

இது போன்ற நல்ல காரியங்களில் இந்திய முஸ்லிம்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வழிகாட்டுதலைப் பின்பற்றி இணைந்து செயல்பட்டால் நம் சமுதாயத்திற்கு நிச்சயம் அது பாதுகாப்பாகத்தான் அமையும். நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாப்பது, இந்த நாட்டில் அனைத்து வகுப்பினருக்கும் இடையில் சமூக நல்லிணக்கத்தை இன்னும் மேம்படுத்தி வளர்த்தெடுப்பது, இந்த நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் சமூகங்களுக்கு பெரும்பான்மையினரால் அடக்குமுறை ஏற்பட்டு விடாமல் பாதுகாப்பதற்காக அவர்களின் கலாச்சார தனித்தன்மைகளை - அடை யாளங்களைப் பாது காப்பது ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களை அடிப் படையாகக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் செயல்பாடுகள், நடவடிக்கை கள், வழிகாட்டல்கள் இந்திய முஸ்லிம்களுக்கு அன்றும் தேவைப் பட்டது; இன்றும் தேவைப்பட்டுக் :கொண்டிருக்கிறது; இனியும் தேவைப்படும் என்ற சூழல்தான் இருக்கிறது. இந்த நோக்கங்களை வென்றெடுப்பதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறவழியில் தொடர்ந்து போராடும். அப்படியான போராட்டத்திற்குத் தலைமை ஏற்க நீங்கள் எல்லோரும் வாருங்கள் என உங்களை உரிமையோடு அழைத்து, இந்த நல்ல வாய்ப்புக்கு நன்றி கூறி எனது உரையை முடிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசி னார்.