Hot Posts

6/recent/ticker-posts

அதிராம்பட்டினத்தில் இந்தியயூனியன் முஸ்லிம்லீக் உறுப்பினர் சேர்க்கும் பனி

அதிராம்பட்டினத்தில் அதிகமான
இளைஞர்கள் முஸ்லிம்லீக்கில் இணைந்தனர்

அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம் நகர இந்தியயூனியன் அலுவலகத்தில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜி மதுக்கூர் ஏ,எம், அப்துல் காதர் தலமையில் நகர பொறுப்பாளர் கே கே,ஹாஜா நஜ்முதீன், வழக்கறிஞர் ஏ,முனாப் ஆகியோர் முன்னிலையில்( 24/10/2021 ) ஞயிற்று கிழமை மாலை 4 மணியளவில் உறுப்பினர் சேர்ப்பு பணி துவங்கியது

நிகழ்ச்சி முன்னதாக வழக்கறிஞர் ஏ, முனாப் அவர்கள் துவா செய்து துவக்கி வைத்தனர் இந்த உறுப்பினர்கள் சேர்க்கையின் போது கடந்த  காலங்கலை விட அதிகமான இலைஞர்கள் இந்தியயூனியன் முஸ்லிம்லீக்கில் இனைத்தனர் அவர்களுக்கு மாவட்ட தலைவர் ஹாஜி மதுக்க்கூர் ஏ எம், அப்துல்காதர் அவர்கள் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினர்

உறுப்பினர் சேர்ப்பின்போது மாவட்ட தலைவர் கூறியதாவது:

உறுப்பினர் சேர்ப்பின்போது எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலுக்கான களப்பணிகளை விரைவாக நகர பொறுப்பாளர்கள் செய்ய வேண்டும்

மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி போன்ற  வார்டுகளில்  கிராம பஞ்சாயத்துகளில் 18 வயதை கடந்த ஆண்,பெண் ஆகியோரை உறுப்பினராக சேர்க்க அதிகமான முயற்ச்சி செய்யவேண்டும் என்று கூறினார்

நிகழ்சியின்போது  தஞ்சாவூர் தெற்கு மாவட்ட  தலைவர்  ஹாஜி மதுக்கூர்  அப்துல் காதர், மதுக்கூர் நகர பொறுப்பாளர்கள்  ஏ,ஷேக் அலாவுதீன், ஏ கே, அஜிசுர் ரஹ்மான், அதிராம்பட்டினம் நகர தலைவர் கே கே,ஹாஜா நஜ்முதீன், வழக்கறிஞர் ஏமுனாப், சேக் அப்துல்லா, அபுபக்கர் ,ஜமால் முஹம்மது, எம்,எஸ்,எஃப், பொறுப்பாளர் எஸ், அஸ்பாக் அஹமது,ஊடகவியலாளர் ஏ,சாகுல்ஹமீது, மற்றும் நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்