அதிராம்பட்டினம் நவ 01
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமலே இருந்து.
கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, 17 மாதங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டன.
தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில், 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்பட்டது பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதைப்போல வரவேற்பு கொடுங்கள்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்துள்ளது.
அதன்படி அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநலை பள்ளியில் ஆசிரியர்,ஆசிரியை ஆகியோர் தலைமை ஆசிரியர் அவர்களது தலைமையில் மாணவ மாணவிகளை இப்பகுதியில் உள்ள சாமூக ஆர்வலர்கள் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் பொறுப்பாளர்கள் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்றனர்
Social Plugin