ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான் அமைப்பாளராகவும், எஸ்ஏசி ஹமீது துணை அமைப்பாளராகவும் தேர்வு.....
தாயகம் திரும்பிய வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலன் கருதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அனைத்து மாநிலங்களிலும் அமைத்து வரும் "பிரவாசி லீக்" அமைப்பின் தமிழ் நாட்டிற்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை நிலையம் காயிதே மில்லத் மன்ஜிலில் இன்று (03-11-2021) நடைபெற்றது.
பிரவாசி லீக் அமைப்பின் தேசியத் தலைவரான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவரும், தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவருமான மாண்புமிகு அப்துல் ரஹ்மான் Ex. MP., அவர்கள் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் K.A.M.முகம்மது அபூபக்கர் Ex MLA அவர்கள், பிரவாசி லீக் தேசிய பொதுச் செயலாளர் அலவி மற்றும் கேரள மாநில பிரவாசி லீக் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரவாசி லீக் அமைப்பின் தமிழ் நாட்டிற்கான நிர்வாகிகள் மற்றும் செயல் திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக கேரளாவில் உள்ளது போல் வெளிநாட்டில் பணி செய்து திரும்பியோருக்கு ஓய்வூதிய திட்டம் மற்றும் காப்பீடு திட்டங்களை தமிழகத்திலும் அமுல்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் ஆலோசிக்கப்பட்டன.
கூட்டத்தின் முடிவில் கீழ்க்கண்ட விவரப்படி அமைப்புக்குழு அமைக்கப்பட்டது.
அமைப்பாளர் :
ஆடுதுறை A. M. ஷாஜஹான், 9965904553
துணை அமைப்பாளர் :
எஸ்.ஏ.சி. ஹமீது
8056033211
குழு உறுப்பினர்கள்:
S. முகம்மது யூசுப், சீர்காழி, 9840090067
Adv. K. கவுஸ் முகைதீன், தாம்பரம்
9444527893
S. நைனா முகம்மது, குளச்சல், 8903478196
S. ரெஜினால்ட் சாம்சன், செங்கோட்டை
9946644219
M. அப்துல் நாசர் - கூடலூர்
8098445665
மூன்று மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக ஆர்வலர்களை சேர்ப்பது என்றும், சேர விரும்புவோர் அமைப்புக் குழுவினரை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Social Plugin