Hot Posts

6/recent/ticker-posts

காரைக்குடி--திருவாரூர் வழித்தடத்தில் விரைவாக எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கவேண்டும்

தென்னக ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ரயில்வே கூடுதல் பொது மேலாளருடன் இன்று திருச்சியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி.,

இராமேஸ்வரம்- திருச்சி பயணிகள் ரயிலை வாலாந்தரவை மற்றும் மண்டபம் கேம்ப் ரயில் நிலையங்களில் நின்று செல்ல, ராமேஸ்வரம் மதுரை ரயில் ஒரு நாளுக்கு மூன்று முறை இயக்க,   அறந்தாங்கி உள்ளடக்கிய திருவாரூர்- காரைக்குடி வழித்தட திற்கு கேட் கீப்பர் களை விரைவாக நியமித்து அறந்தாங்கி வழியாக வண்டிகளை இயக்க, ‌ராமநாதபுரம் மண்டபம் உள்ளிட்ட நிலையங்களில்  வண்டிகள் நின்று செல்ல, ராமேஸ்வரம் சென்னை ரயிலில் புதிய பெட்டிகள் மாற்ற, ராமநாதபுரம், மண்டபம், உச்சிப்புளி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை களை விரிவாக்கம் செய்து மேம்படுத்த, தங்கச்சிமடம் ரயில் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர, ராமேஸ்வரம்- சென்னை பகல் நேர விரைவுவண்டி இயக்க உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தினார்.
--
தென்னக ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் குறித்து தென் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ரயில்வே கூடுதல் பொது மேலாளருடன் இன்று திருச்சியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள்.,

1. இராமநாதபுரம்  மாவட்டத்தில் பழமை வாய்ந்த வாலாந்தரவை ரயில் நிலையம் மற்றும் மண்டபம் கேம்ப் ரயில் நிலையங்களில் மீண்டும் பயணிகள் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றிகள்.

அதேபோல தற்போது ராமேஸ்வரம்- மதுரை பயணிகள் ரயில் மட்டும் வாலாந்தரவை மற்றும் மண்டபம் பகுதிகளில் நின்று செல்கிறது அத்தோடு ராமேஸ்வரம் - திருச்சி பயணிகள் ரயிலையும் மேற்கூறிய ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

2. ராமேஸ்வரம் - மதுரை, மதுரை- ராமேஸ்வரம் ரயில்கள் கோரோனா பொது முடக்க காலத்திற்கு முன்பு தினமும் மூன்று முறை இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஒரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது. 

என்னுடைய நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் மாவட்ட மக்கள் வணிக ரீதியாகவும் இதர பயன்பாட்டிற்காகவும் மதுரையோடு அதிகம் தொடர்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள். எனவே ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் ரயில் மாவட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயிலாக இருக்கிறது. 

எனவே மீண்டும் பழைய படி அந்த ரயிலை தினமும் மூன்று முறை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு பல்வேறு ரயில்கள் மீண்டும் இயக்கப்படாமல் இருக்கிறது. 
உதாரணத்திற்கு

இராமேஸ்வரம்- கன்னியாகுமரி வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்பட்டு வந்த ரயில் தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. அதேபோல தற்போது சிறப்பு ரயில்கள் ஆக இயங்கி வரும் ரயில்களை முன்பை போல இயல்பான ரயிலாக (Normal Train) மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தற்போது கொரோனா ஓரளவிற்கு கட்டுப்படுத்த பட்டிருக்கிறது. மக்கள் அன்றாட வாழ்க்கையை துவங்க ஆரம்பித்து விட்டார்கள். பழைய நடைமுறைகள் திரும்பிக் கொண்டிருக்கிறது. 
எனவே சிறப்பு ரயில்களை இயல்பான ரயில்கள் (Normal Train)  ஆக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. இராமநாதபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் விரைவு வண்டிகள் நில்லாமல் செல்வதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

அதிலும் கொரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட வண்டிகள் மீண்டும் இயங்க ஆரம்பித்ததிலிருந்து மேலும் சில விரைவு வண்டிகள் சில நிறுத்தங்களிலும் நிற்காமல் செல்வது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

எனவே கீழ்காணும் விரைவு வண்டிகள் குறிப்பிடப்பட்டுள்ள நிறுத்தங்களில் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இராமேஸ்வரம் - வாரணாசி அதிவிரைவு வண்டி
இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தம்

பைசாபாத் To இராமேஸ்வரம் (06793)
இராமேஸ்வரம் To பைசாபாத் (06794)
இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தம்.

சேது EXP (02205) சென்னை To இராமேஸ்வரம்
மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தம்.

புவனேஸ்வர் To இராமேஸ்வரம் (08495)
இராமேஸ்வரம் To புவனேஸ்வர் (08496)
மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தம்.

வரணாசி To இராமேஸ்வரம் (05119)
இராமேஸ்வரம் To வாரணாசி (05120)
மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தம்.

இராமேஸ்வரம் - செகந்திராபாத் (07686),
செகந்திராபாத் - ராமேஸ்வரம் (07685) ரயில்கள்
இராமநாதபுரம் மற்றும் மண்டபத்தில் நிறுத்தம்.
உள்ளிட்ட இரயில் நிலையங்களில் மேற்கூறப்பட்ட இரயில்கள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

6. ராமேஸ்வரம் - சென்னை இயக்கப்பட்டு வரும்  ரயில்களின் பெட்டிகள் மிகவும் பழைய பெட்டிகளாக இருப்பதினால் பயணிகள் மிகவும் அசௌகரியமாக உணர்கின்றார்கள்.
எனவே அப்படிகளை மாற்றி நல்ல நிலையில் உள்ள புதிய பெட்டிகளை பொருத்தி பயணிகள் பயனடைய ஆவன செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

7. ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்டத்தின் தலைநகரமாக ராமநாதபுரம் ரயில் நிலையத்தின் நடைமேடை விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று நெடு நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றோம்.

அதேபோல மண்டபம் உச்சிபுளி ரயில் நடைமேடை களையும் விரிவாக்கம் செய்து மேம்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றோம்.

எனவே மேற்கூறிய ரயில் நிலையங்களில் நடைமேடைகளை விரிவாக்கம் செய்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .

8. ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தங்கச்சிமடம் ரயில் நிலையம் 1992 வரை செயல்பாட்டில் இருந்து வந்தது. கடந்த 20 ஆண்டுகளாக அந்த ரயில் நிலையம் செயல்படாமல் இருக்கிறது.
அந்த வழியாக பல்வேறு ரயில்கள் கடந்து சென்றாலும் அந்த ரயில் நிலையம் செயல்பாட்டில் இல்லாததால் அந்த பகுதியில் ரயில்கள் நிற்காமல் செல்வதால் பகுதி மக்கள் பெரிதும் வருந்துகின்றனர்.

மேலும் தங்கச்சிமடம் பகுதியில் சுத்தமான குடிநீர் கிடைக்கிறது, 30 ஏக்கர் காலி இடமும் அங்கு உள்ளது. அந்த இடத்தில் ரயில்வே யார்ட் அமைக்கவும் சாத்தியக்கூறுகள் உள்ளது.
எனவே இதனையும் பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

9. இராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் பகல்நேர விரைவு வண்டி ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. தற்போதுள்ள ராமேஸ்வரம் - சென்னை விரைவு வண்டிகள் இரவு நேரத்தில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது போதுமானதாக இல்லை. 

ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முன்கூட்டியே அதிக அளவில் இரவு நேர வண்டிகளில் முன்பதிவு செய்து விடுவதால் தினசரி இரண்டு வண்டிகளும் நிரப்பி விடுகின்றன.
எனவே பகல் நேர விரைவுவண்டி இயக்க வேண்டும் என தொகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனவே மக்களின் கோரிக்கையை ஏற்று இராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேர விரைவுவண்டி இயக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


10. என்னுடைய தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ரயில் நிலையத்தை உள்ளடக்கிய திருவாரூர் - காரைக்குடி ரயில் பாதையில் லெவல் கிராசிங் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை அடுத்து தற்போது முன்னாள் ராணுவ வீரர்களை அந்த பணியிடங்களில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த பணியிடங்களை விரைவாக நிரப்ப துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரைவாக பணியிடங்களை நிரப்பி மீண்டும் பழைய ரயில்களை அந்த வழித்தடத்தில் இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

திருச்சியில் இருந்து காரைக்குடி (Demu) வரை வரும் பயணிகள் ரயிலை அறந்தாங்கி வரை நீட்டிப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மயிலாடுதுறையிலிருந்து அறந்தாங்கி வழியாக காரைக்குடி.

ராமேஸ்வரத்தில் இருந்து அறந்தாங்கி வழியாக சென்னை எழும்பூர்.

மயிலாடுதுறையிலிருந்து அறந்தாங்கி வழியாக மதுரை

ராமேஸ்வரத்தில் இருந்து அறந்தாங்கி, காரைக்குடி, திருவாரூர் வழியாக தாம்பரம் வரை

பழைய ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை- புனலூர் ரயிலை மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, வழியாக காரைக்கால் வரை நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த ரயில் கிட்டத்தட்ட மதுரையில் 16 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது .
அந்த ரயிலை இயக்காமல் உள்ள காரைக்குடி திருவாரூர் தடத்தின் வழியாக நீட்டிப்பு செய்தால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நேரடியாக மதுரைக்கும் கேரளா திருவனந்தபுரம் திருநெல்வேலி நாகர்கோயில் செல்ல ஏதுவாக இருக்கும் எனவே உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல பெங்களூர் பையப்பணாகல்லி நியூ டெர்மினல்  துவங்கபட்டிருக்கிறது. அதிகமான ரயில்களை அங்கிருந்து இயக்க முடியும் என தென்மேற்கு ரயில்வே கூறியிருந்தது.

எனவே, ராமேஸ்வரத்திலிருந்து அறந்தாங்கி ,காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை , கடலூர் விழுப்புரம் ,காட்பாடி, வழியாக பெங்களூருக்கு வாரம் மும்முறை அல்லது தினசரி ரயில் இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம் பி தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கைகளை முன்வைத்தார்.