Hot Posts

6/recent/ticker-posts

அதிரை நகர முஸ்லிம்லீக் ஆலோசனை கூட்டம். வீடு வீடாக உறுப்பினர்கள் சேர்க்கும் பனி தீவிரம்



அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம் நகர இந்தியயூனியன் முஸ்லிம்லீக் ஆலோசனை கூட்டம் கட்சியின் அலுவலகத்தில்  07/11/2021 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின்பு தலைவர் ஹஜா நஜ்முதின் தலைமையில் நடைபெற்றது

முன்னதாக கட்சியின் துணைத்தலைவர் அபூபக்கர் கிராத் ஓதி துவக்கி வைத்தனர் பின்பு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் உள்ளாட்சி தேர்தலில் முஸ்லிம்லீக் போட்டியிட உள்ள வார்டுகளைக் கண்டு தோழமை கட்சி இடம் கலந்து பேசி கேட்டு பெறுவது என்று கலந்தாலோசிக்கப்பட்டது

 கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய உயர்மட்ட குழு கூட்டத்தில் இந்திய யூனியன் விமன்ஸ் லீக் தேசிய தலைவியாக தேர்வு செய்யப்பட்டுள்ள 
ஏ.எஸ்.பாத்திமா முஸப்பர் அவர்களுக்கு இந்த கூட்டம் சார்பாக இதயம் நிறைந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது

புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் இன்று வீடு வீடாக சென்று ஜெய்லானி தலைமையில் கட்சியில் இலைஞர்களை சேர்க்கும் பணி கொட்டும் மழையிலும் துவங்கியது

கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் ஜெய்லானி ,ஹாஃபிஸ் அஜிஜுர் ரஹ்மான்,இப்ராஹிம் மற்றும் எலக்ட்ரிக் இப்ராஹிம் ,ட்ரைவர் ரஹிம், இஸ்மாயில் ,சேக் அப்துல்லாஹ் சாகுல்ஹமீது,ஜமால் முஹம்மது,இமாம்தின் ஆகியோர் கலந்து கொண்டனர்