Hot Posts

6/recent/ticker-posts

மகத்துவமிக்க இந்த இயக்கத்தில் இணைந்துள்ள நீங்கள் அல்லாஹ் அளித்த திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகிறேன்கட்சியை வழிநடத்துங்கள் என்றுதான் அழைக்கிறோம்; இன்று உறுப்பினராக இருக்கும் நீங்கள் நாளை தலைமை பொறுப்பிற்குக்கூட வரமுடியும்அனைத்து சமுதாயத்தின் விளிம்புநிலை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகபோராடும் வரலாற்றுச் சிறப்புமிக்க பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்சென்னையில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியினர் தாய்ச்சபையில் இணையும் நிகழ்ச்சியில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு

மகத்துவமிக்க  இந்த இயக்கத்தில் இணைந்துள்ள நீங்கள் அல்லாஹ் அளித்த திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகிறேன்

கட்சியை வழிநடத்துங்கள் என்றுதான் அழைக்கிறோம்; இன்று உறுப்பினராக இருக்கும் நீங்கள் நாளை தலைமை பொறுப்பிற்குக்கூட வரமுடியும்

அனைத்து சமுத


அகில இந்திய மஜ்லிஸ் ஏ. இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் சங்கமித்து இணையும் விழா சென்னை திருவல்லிக்கேணி காயிதே மில்லத் சாலையிலுள்ள அல்மாலிக் மஹாலில் 07-11-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சிறப்புரையாற்றியதாவது:-

இனியதோர் இணைப்பு விழா

சகோதரி ஃபாத்திமா முஸஃப்பர் அவர்கள் கூறியது போல, மழை கொட்டும் இந்த நேரத்தில் உணர்ச்சிகளை எல்லாம் கொட்டி இனியதோர் இணைப்பு விழாவை இங்கே நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். அன்புச் சகோதரர் அஸதுத்தீன் உவைஸி அவர்களுடைய கட்சியில் இருந்து 17 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அண்மையில் மதுரையில் நமது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்தனர். எஞ்சிய மாவட்ட நிர்வாகிகளும் மனப்பூர்வமாக இணையும் நல்லதொரு நிகழ்ச்சியை இங்கே சகோதரர் இனாயத்துல்லாஹ் ஷரீஃப் சிறப்புற நடத்தியிருக்கிறார்.

இணைவதால் கிடைக்கும் மகத்துவம்

மவ்லானா அப்ராருல் ஹக் ரஷாதீ, சகோதரி ரிஹானா, சகோதரர்களான அப்துல் பாசித், மஸ்தான், டாக்டர் ஆஷிக் அலி, ஏ.எம். ஜின்னா, அஃப்ஸர், சத்தாஜ் பேகம், சம்சுதீன் உள்ளிட்ட சகோதர சகோதரிகள் தாம் இதுவரை இருந்து வந்த கட்சியிலிருந்து விலகி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம், இதில் இணைவதன் மகத்துவம், இணைந்ததால் தாம் பெற்ற பெருமிதம் என ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் உற்சாகமுடன் சொல்லச் சொல்ல அதைக் கேட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியால் மலர்ந்துள்ளது.
 
அரசியல் அமைப்பு சட்டப்படிஇயங்கக்கூடிய ஒரு பேரியக்கம்

இந்தக் கட்சியில் இத்தனை நாள் இருந்து கொண்டிருக்கக் கூடிய எங்களுக்கு இதைப் பற்றி புதிதாக உற்சாகமுடன் பேசுவோரின் கருத்துகளைக் கேட்க கேட்க எங்களை அறியாமல் அந்த உற்சாகம் வந்து விடுகிறது. இத்தனை நாள் ஒரு மிகச் சரியான தளத்தில்தான் இருந்து கொண்டிருக்கிறோம் என்ற பெருமிதம் எங்கள் நெஞ்சம் எல்லாம் நிறைந்து விடுகிறது. நாங்கள் மிகச்சரியான ஓரிடத்தில்தான் இருக்கிறோம் என்ற உறுதியை எங்களுக்கு மேலும் வலுப்படுத்திக் கொண்டு இருக்கிறது.
இந்திய விடுதலைக்கு முன்பு இந்தக் கட்சி முஸ்லிம்களுக்கு மட்டுமான கட்சியாக இருந்தது. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா விடுதலை அடைந்ததற்குப் பிறகு இங்குள்ள முஸ்லிம்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் செயல்பட்டார். அதன் விளைவாக 1948ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் நாளன்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என பெயரிட்டு இந்தக் கட்சியை புதிய வடிவில் துவக்கினார். இது இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இயங்கக்கூடிய ஒரு பேரியக்கம். இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி, இங்குள்ள அயசபiயேட ளடிஉநைவல என்று சொல்லப்படும் விளிம்பு நிலை மக்கள் அனைவரின் நலனுக்காக இந்திய அரசியல் சாசன சட்டம் தந்து கொண்டிருக்கிற உரிமைகளைப் பாதுகாக்கவும், அந்த உரிமைகளைப் பறிக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படுகையில் அதை எதிர்த்து வாதாடவும், தேவைப்பட்டால் போராடி மீளப் பெறுவதற்கும் என இந்த நோக்கங்களுக்காகவே இயங்கிக் கொண்டிருக்கிறது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக். ஆக இந்திய விடுதலைக்கு முன்பு இது முஸ்லிம்களுக்கு மட்டுமான கட்சி. விடுதலைக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக இயங்கும் கட்சி.
 
உறுப்பினர் சேர்ப்புப் பணி

இந்தக் கட்சியின் சட்ட விதிகளின் படி, கட்சிக்கு இந்தியா முழுக்க அனைத்துப் பகுதிகளி லிருந்தும் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி இப்போது துவங்கி யிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் மட்டுமின்றி சகோதர சமயங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் கட்சியில் உறுப்பினர் ஆக்குவதற்காக நிகழும் நவம்பர் மாதம் துவங்கி டிசம்பர் இறுதி வரை உறுப்பினர் சேர்ப்புப் பணி தீவிரமாக நடத்தத் திட்டமிடப்பட்டு, அதனடிப் படையில் நடைபெற்றும் வருகிறது.
 
வன்முறைக்கு துணியவும் கூடாது; வன்முறைக்கு பணியவும் கூடாது

இந்திய அரசியல் சாசன சட்டத்தைப் பின்பற்றி, 25 ஆண்டுகளுக்கும் மேலாக கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் வழியில் நின்று, தமிழக மக்களுக்கு அரசியல் வெளிச்சத்தை வழங்கிக் கொண்டிருந்த சிராஜுல் மில்லத் அவர்கள் எப்போதும் கூறியது போல """"வன்முறைக்கு துணியவும் கூடாது; வன்முறைக்கு பணியவும் கூடாது"""". காரணம், நமது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அதற்கு எந்த வகையிலும் வாசலைத் திறக்கவில்லை. எனவே இது காலத்திற்கேற்ற முழக்கம். பயந்துவிட்டால் கோழைகள் ஆகி விடுவோம். முஸ்லிம்கள் கோழைகளாக இருந்ததாக வரலாறே இல்லை. ஆக, நாம் கோழைகளாகவும் இருக்க வேண்டாம். வம்பை முந்திக் கொண்டு வளர்ப்பவர்களாகவும் இருக்க வேண்டாம்.

சிறுபான்மை மக்கள்

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்பது நமக்கு முன் சென்ற தலைவர்கள் நமக்காகப் போட்டுத் தந்த ராஜபாட்டை என தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். இந்த ராஜபாட்டையில் முஸ்லிம்கள் மட்டுமின்றி - இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை மக்கள் அனைவரும் நடைபோடுவார்களேயானால் அவர்களின் உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படும். அதைப் பறிக்க நினைப்பவர்களின் முயற்சிகள் தோல்வியைத் தழுவும். காலப்போக்கில் அவர்களும் காணாமல் போய்விடுவார்கள். காரணம், இந்தப் பேரியக்கத்தை அந்தளவுக்குக் கட்டமைத்துக் கட்டிக் காப்பாற்றி நம் தலைவர்கள் நம்மிடம் தந்திருக்கிறார்கள்.
 
அஸதுத்தீன் உவைஸி

அஸதுத்தீன் உவைஸி எனக்கு அருமையான நண்பர். நமக்குத் தேவையானபோது அவரும், அவருக்குத் தேவையான போது நாமும் அவ்வப்போது ஒத்துழைப்புகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறோம். எனவே அவரைப் பற்றி எதையும் நாம் தவறாகச் சொல்ல அவசியமில்லை. ஆனால், சில தகவல்களை நான் உங்களுக்குத் தெரிவித்தாக வேண்டும். நமது இயக்கத்திற்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்று பெயர். இந்திய அரசியல் சாசனம் இந்த நாட்டை "India is the Union of States - அதாவது, இந்தியா மாநிலங்களின் ஒன்றியம்"""" என்றுதான் சொல்கிறது. அதன்படிதான் நம் தமிழக அரசும் ஒன்றிய அரசு என அழைக்கிறது. ஆனால், நண்பர் அஸதுத்தீன் உவைஸி தனது கட்சியின் முதலில் இருந்த மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற பெயருக்கு முன் ‘‘All India - அகில இந்திய"""" என்று சேர்த்துக் கொண்டார். அப்படியொரு சொற்பயன்பாடு இந்திய அரசியல் சாசனத்தில் இல்லை. இந்திய அளவில் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காக அவர்களாக வைத்துக்கொண்ட பெயர் அது. அக்கட்சிக்கு முப்பத்து நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வக்ஃப் சொத்துக்கள் உள்ளன. அது அரசியல் கட்சி நடத்துவதற்காகவே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்து. அதன் மதிப்பு இன்று கணிசமான அளவுக்கு உயர்ந்தும் இருக்கும். அந்தச் சொத்துக்கு முத்தவல்லிதான் பொறுப்பு. வக்ஃபுக்கு  இதற்கு முன் அவரது பாட்டனார், பிறகு அவரது தந்தை, இன்று இவர் முத்தவல்லி பொறுப்பில் உள்ளனர். ஆக, அகில இந்திய கட்சி என பெயர் வைத்துக் கொண்டாலும் - அவர்களின் நேரடி வாரிசுகளைத் தவிர வேறு யாரும் அதன் தலைவராக இருக்க முடியாது. காரணம், அவர்கள் முத்தவல்லியாக இருக்க மாட்டார்கள். இவை 15 ஆண்டுகளுக்கு முன் நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவரிடமிருந்து நான் தெரிந்துகொண்ட தகவல். இந்த அடிப்படை உண்மை பலருக்குத் தெரியாது. """"இது ஒரு அகில இந்திய கட்சி"""" என்ற பிம்பம் உருவாக்கப்பட்டு இருப்பதே அதற்குக் காரணம். ஒரு பள்ளிவாசலுக்கு விளக்கு ஏற்றுவதற்காக என ஒரு வக்ஃப் சொத்து இருந்தால், அதை அதற்காக மட்டுமே பயன்படுத்த முடியும். அந்த வகையில் இந்தச் சொத்து அரசியல் கட்சி நடத்துவதற்காக என்றே உள்ளது. இதைக்கொண்டு அரசியல் கட்சியை நடத்தலாமே தவிர வேறு எதையும் செய்ய முடியாது. குறை சொல்வதற்காக இதை நான் சொல்லவில்லை. இதுதான் யதார்த்தம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சொல்கிறேன்.
 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

ஆனால் நமது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிலை முற்றிலும் இதிலிருந்து வேறுபட்டது. இந்த கட்சியில் யாரும் உறுப்பினராக இருக்கலாம். தகுதியை வளர்த்துக் கொண்டு தலைவரும் ஆகலாம். இப்போது நீங்கள் இந்தக் கட்சியில் இணைந்து இருக்கிறீர்கள். """"நீங்கள் பணி செய்யுங்கள்; நாங்கள் உத்தரவிடுகிறோம்"""" என்று நாங்கள் சொல்லப் போவதில்லை. """"இந்தக் கட்சியை வழி நடத்துங்கள்"""" என்றுதான் ஒவ்வொருவரையும் நாம் அழைக்கிறோம். இன்று உறுப்பினராக இருக்கும் நீங்கள் நாளை இதன் தலைமைப் பொறுப்பிற்குக் கூட வரமுடியும். அந்த உரிமையை உங்களுக்கு இந்தக் கட்சி வழங்கியிருக்கிறது. இங்கே முடிவுகளை தலைமை எடுப்பதில்லை. மாறாக, உறுப்பினர்களில் இருந்து துவங்கி, அனைவரின் கருத்துகளையும் பெற்று எடுக்கப்படும் முடிவுகளை தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது, அவ்வளவுதான்.
 
ஃபாத்திமா முஸப்பர்

இந்தக் கட்சிக்கு முதலில் பல்வேறு உறுப்பினர்களுடன் கிளை துவங்கும். ஒரு மாவட்டத்தில் உள்ள பல கிளைகள் இணைந்து மாவட்ட நிர்வாகம் தேர்வாகும். அந்த மாவட்ட நிர்வாகம் மாநில நிர்வாகத்தைத் தேர்ந்தெடுக்கும். மாநிலங்கள் சேர்ந்து தேசிய நிர்வாகத்தைத் தேர்ந்தெடுக்கும். அதுபோல, இக்கட்சிக்கு சார்பு அமைப்புகள் பல உள்ளன. இளைஞர் அணி உள்ளது. 35 வயதுக்கு உட்பட்டவர்கள் அதில் அங்கம் வகிக்கலாம். அது ஒரு தனியான அமைப்பு. அதற்கென சட்ட விதிகளும் தனியாக உள்ளன. அதற்கென தனி நிர்வாகம் கீழிருந்து மேலே வரை இருக்கிறது. அதுபோலவே மாணவரணி, மகளிரணி, சுதந்திர தொழிலாளர் யூனியன், காயிதே மில்லத் பேரவை என சார்பு அமைப்புகள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே நிர்வாகம் கீழிருந்து மேல் வரை உள்ளது. சட்ட விதிகளும் தனித்தனியே உள்ளன. அப்பேர்ப்பட்ட சார்பு அணிகளுள் ஒன்றான மகளிர் அணியின் தேசிய தலைவராகத்தான் நம்முடைய சிராஜுல் மில்லத் அவர்களின் அன்பு மகள் சகோதரி ஃபாத்திமா முஸஃப்பர் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு முன் பேராசிரியை தஸ்ரிஃப் ஜஹான் தமிழக தலைவராகவும், தேசிய தலைவராகவும் இருந்து வந்தார். அவரது உடல் நலக்குறைவு காரணமாக தேசிய தலைவர் பொறுப்பு மட்டும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகில் வயதானவர்கள் இருப்பதாகப் பேசப்படுகிறது. எல்லோரும் இருக்கலாம் என்றால், வயதானவர்களும் சேர்ந்துதானே? அவரவர் வயதுக்கேற்ப பல்வேறு சார்பு அணிகள் நான் ஏற்கனவே சொன்னது போல இருக்கின்றன. அவற்றில் எந்தெந்த அணிகளில் எல்லாம் உங்களால் இருக்க முடியுமோ இருங்கள். அதன் தலைமைப் பொறுப்பை ஏற்கும் அளவுக்கு தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். தலைவர்களாக இருந்து வழிநடத்துங்கள். இப்படி அழைப்பதற்காகவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
சட்டவிதிகள், கொள்கை முடிவுகள்

இந்தக் கட்சியின் சட்ட விதிகள், கொள்கை முடிவுகள், அவ்வப்போது அறிவிக்கப்படும் முடிவுகள் என அனைத்துமே தீர ஆலோசித்து, நிதானமாக எடுக்கப்பட்டு வருபவைதான். அவசர கோலத்தில் இங்கு எந்த முடிவும் இதுவரை எடுக்கப்பட்டதும் இல்லை; இனி யாரும் அப்படி செய்து விடவும் முடியாது. அப்படிக் கூடி, நன்கு ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்ட பிறகு இந்த உலகமே எதிர்த்தாலும் - எடுத்த முடிவில் இருந்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஒருபோதும் மாறாது. இதுதான் இந்தக் கட்சியின் வரலாறு. அப்படிப்பட்ட மகத்துவமிக்க வரலாற்றுக்குச் சொந்தமான ஒரு கட்சியில்தான் இப்பொழுது நீங்கள் உங்களை இணைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இது உங்கள் நலனுக்காக நீங்கள் எடுத்துள்ள நல்ல முடிவு. நீங்கள் எந்தச் சமுதாயத்தைச் சார்ந்து இருக்கிறீர்களோ அந்தச் சமுதாய நலனுக்காக எடுக்கப்பட்ட நல்ல முடிவு. விளிம்பு நிலையில் உள்ள மக்கள் அவர்கள் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் - அவர்களது உரிமையைப் பாதுகாப்பதற்காகவும், அதைப் பறிக்க யாரும் முயற்சித்தால் அதை சட்டப்பூர்வமாக எதிர்ப்பதற்கும், இழந்த உரிமைகளை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கும் ஆன அமைப்பு இது.
இந்த உலகையெல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவன் வகுத்த வழியில், இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் வாழ்ந்து வழிகாட்டிய நெறி முறைப்படி, அந்த மேன்மைமிக்க - புனிதமான வழிமுறையை நமக்கு வழிவழியாகக் கொண்டு வந்து சேர்த்த நபித்தோழர்கள், தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்கள், இமாம்கள், இறைநேசர்கள், உலமாக்கள் காட்டும் வழித்தடத்திலேயே இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பிசகாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த ராஜபாட்டையில்தான் இக்கட்சி எப்பொழுதும் பயணிக்கும்.
 
சகோதரத்துவத்தை பேணவேண்டும்

இந்த நாட்டில் முஸ்லிம்கள் மட்டும் இல்லை. இந்துக்கள், கிறிஸ்துவர்கள் என பல சகோதர சமயங்களைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒரு தாய் தந்தைக்குப் பிறந்தவர்களே. அதுதான் நமது நம்பிக்கை. ஆக, அவர்களும் நம் சகோதரர்களே. அந்தச் சகோதரர்கள்தான் இந்துக்களாக, கிறிஸ்து வர்களாக, இன்னபிற சமயங்களை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஒரு வீட்டில் எப்படி சகோதரர்களுக்கு இடையில்  ஒற்றுமையுடன் இருக்கி றோமோ அதுபோல உலகளவிலும் சகோதரத் துவத்தைப் பேண வேண்டும். அதுதான் ருniஎநசளயட க்ஷசடிவாநசாடிடின. அதைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கட்டாயக் கடமை என மகத்துவமிக்க நமது இஸ்லாம் மார்க்கம் சொல்கிறது.
 
அபூபக்கர்-அப்துர் ரஹ்மான்-நவாஸ்கனி

இந்த இயக்கம் உங்களுக்கானது, நமக்கானது, நம் சமுதாயத்திற்கானது, இந்த நாட்டில் உள்ள ஒட்டுமொத்த விளிம்புநிலை மக்களின் உரிமைகளைப் பாதுகாப் பதற்கானது. இக்கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரும் இதை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம். ஆக நமக்காக, நம் சமுதாயத்திற்காக, ஒட்டுமொத்த மனிதகுல நன்மைக்காக இக்கட்சியின் பொறுப்பில் உள்ள யாரிடமும் உங்கள் தேவையை நேரடியாகவே கேட்டுப் பெறலாம். இதோ பொதுச் செயலாளர் தம்பி அபூபக்கர் இருக்கிறார். எப்பொழுது வேண்டுமானாலும் உங்களின் குரலைச் செவிமடுக்கவும், தீர்வைத் தரவும் அவர் ஆயத்தமாக இருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் தம்பி நவாஸ்கனி இருக்கிறார். நம் குரலை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறார். எத்தனையோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிற போதிலும், முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைவருக்கும் பொதுவான நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெயரைப் பெற்று இருக்கிறார். தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைமைப் பொறுப்பை தமிழக முதல்வர் தளபதி அவர்கள் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகுக்கு வழங்கி இருக்கிறார். அதன் தலைவராக அன்புச் சகோதரர் - நம் கட்சியின் மாநில முதன்மை துணை தலைவர் அப்துர்ரஹ்மான் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார். இதற்காக தமிழக முதல்வருக்கு நமது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டில் பள்ளிவாசல்கள், தர்காக்கள் என பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வக்ஃப் நிறுவனங்கள் சுன்னத் வல் ஜமாஅத் நடைமுறைப்படி ஆனவை. அவற்றையெல்லாம் அதன் முறை மாறாமல் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய அந்தப் பொறுப்புக்குத் தலைவராக இருக்கும் அப்துர்ரஹ்மான் அவர்களை அது தொடர்பான தேவைகளுக்கு எப்போதும் அணுகி தீர்வு பெறலாம். அதன் உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி சட்டப்படி தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். அவரிடமும் உங்கள் கோரிக்கைகளை முன்வைத்து தீர்வைப் பெற முயற்சிக்கலாம்.
இப்படி ஒருவருக்கொருவர் அவரவருக்குத் தேவையான வற்றில் ஒத்துழைப்புகளை வழங்குவதே இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அங்கத்தினரின் அடிப்படைப் பணிகளாக இருந்துகொண்டு இருக்கின்றன. அந்த வரிசையில் இன்று சகோதரர் ஏ. முஹம்மது இனாயத்துல்லாஹ் ஷரீஃப் ஏற்பாட்டில் நீங்கள் இந்த வரலாற்றுப் பேரியக்கத்தின் அங்கத்தினர் ஆகி இருக்கிறீர்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு வழங்கியுள்ள எல்லா திறமைகளையும் வெளிப்படுத்தி சிறப்புற செயல்பட்டு, உங்கள் தன்னலமற்ற சேவைகளால் இந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பையும் அலங்கரிக்க வாருங்கள் என உங்களை அன்போடு வேண்டிக் கொண்டு இந்த நல்ல ஏற்பாட்டைச் செய்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.