Hot Posts

6/recent/ticker-posts

நினைவு நாள் தினம் அனைவரும் துஆ செய்வோம்*




*கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள் பெயரிலும் மற்றும் இறைநேசர்கள் பெயரிலும் புகழ் கவிதைகளை எழுதி இறை அன்பை பெற்ற மகான் ஷெய்குனா சதகதுல்லாஹ் அப்பா  (மாதிஹுர் ரஸூல்) அவர்களின் உஸ்தாது  மக்தூம் சின்னீனா லெப்பை ஆலிம் அவர்கள் இவ்வுலகை விட்டும் மறைந்த நினைவு நாள் : ரபீஉல்ஆகிர் பிறை 5 வியாழக்கிழமை*

கீழக்கரையில் வஃபாத்தாகி கீழக்கரை *பழைய குத்பா பள்ளிவாசலில்   நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்*

இவர்கள் இஸ்மாயில் லெப்பை ஆலிம் அவர்கள் மகன் *அப்துல் காதர் லெப்பை ஆலிம் என நாமம் மகுடமிட்ட புனைப்பெயர் மஃதூம் சின்னீனா லெப்பை ஆலிம்* என பிரபல்யமுற்ற *வலியுல்லாஹ்* இவர்கள்

மகத்துவமுள்ள *அதிராம்பட்டினத்தில்*  ஹிஜ்ரி 982  ம் வருடம் பிறந்து ,வளர்ந்து மகத்துவமிக்க *கீழக்கரைக்கு குடும்பத்துடன் சென்று 89 வது வயதில்*  ஹிஜ்ரி 1071 ம் வருடம் *ரபியுல் ஆகிர் பிறை 5 , வியாழக்கிழமை அஸருக்குப் பின்பு தாருல் ஃபனாவை விட்டு தாருல் பகாவின் அளவில் சென்றார்கள்* இவர்களின் ஜனாஸா நல்லடக்கம் *கீழக்கரையில் நடைபெற்றது*

கீழக்கரையில் வள்ளல் சீதக்காதியின் முன்னோர்களால் நடத்தப்பட்டு வந்த " *தாருல் உலூம்" எனும் அரபிக் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்று*  கல்விபணியாற்றி வந்த மக்தூம் *சின்னீனா லெப்பை ஆலிம் அவர்கள்*  ஹிஜ்ரி 1050  ல் ( கி,பி, 1640 ல்)  தன் சொந்த பணத்தில், தன் சொந்த ஊராகிய  *அதிராம்பட்டினத்தில் ஒரு ஜும் ஆ பள்ளி வாசலை எழுப்பும் அளவுக்கு*  வசதிபடைத்த வராகத் திகழ்ந்தார் அவர்களது *நினைவு தினம் 11/11/2021*  

அதிராம்பட்டினம் ஆன்மீக மேதை  மக்தூம் *சின்னீனா லெப்பை ஆலிம்* என்று அழைக்கப்பட்டு வந்த  மகான் ஷெய்கு அப்துல் காதிர் ஸித்தீக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம்  *மாதிஹுர் ரஸூல் சதகதுல்லாஹ் அப்பா அவர்கள் கல்வி கற்க கீழக்கரை சென்றது குறிப்பிடத்தக்கது*

*இவ்வாண்டின் சிறப்பு : மகான் மறைந்த நாள்  ரபீஉல்ஆகிர் பிறை 5 வியாழக்கிழமை அதே போன்று இவ்வாண்டும் பிறை 5 வியாழக்கிழமையாகவுள்ளது. அவர்களுக்கு அதிக அதிகமாக துஆ செய்வதோடு அவர்களின் வாழ்க்கையை பின்பற்றி நடப்பதற்கு நம் அனைவருகளுக்கும் அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்*

    தகவல்
*மவ்லவி*
*M அபுதாஹிர் ரஹ்மானி*
*அதிராம்பட்டினம்*